தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வேவ்ஸ் திரைப்பட பஜார் திரைக்கதை எழுத்தாளர்கள் பயிற்சித் திட்டம் 2025-க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ‘யாயாவர் - தி மைகிரேட்டிங் பேர்ட்’ என்ற திரைப்படத் திட்டம் சர்வதேச அளவிலான ஒருங்கிணைப்பிற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது

प्रविष्टि तिथि: 22 JUL 2026 1:05PM by PIB Chennai

மத்திய அரசின் தகவல், ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகத்தால் நடத்தப்படும் வேவ்ஸ் திரைப்பட பஜார் திரைக்கதை எழுத்தாளர்கள் பயிற்சித் திட்டம் 2025-க்கு தேர்ந்தெடுக்கப்பட்ட ‘யாயாவர் - தி மைகிரேட்டிங் பேர்ட்’ என்ற திரைப்படம் சர்வதேச அளவிலான ஒருங்கிணைப்பிற்கான விருப்ப கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளது.

இத்திரைப்படத்தை இணைந்து உருவாக்க, நிதி அளிக்க, தயாரிக்க, சர்வதேச பார்வையாளர்களிடையே இப்படத்தைக் கொண்டு சேர்க்கும் வகையில் ஐரோலர் மீடியா & என்டர்டெய்ன்மென்ட் (இந்தியா), நார்ஸ் கீ புரொடக்‌ஷன்ஸ் (பின்லாந்து) ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி, ஐரோலர் மீடியா & என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் முதன்மை தயாரிப்பாளராகவும், முதன்மை நிதி அளிப்பவராகவும், தயாரிப்பு திட்டமிடல், செயல்படுத்துதல் ஆகியவற்றை மேற்கொள்பவராகவும் இருக்கும். அதேபோல், நார்ஸ் கீ புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் பின்லாந்தில் நடைபெறும் தயாரிப்பிற்கு பிந்தைய பணிகளை ஒருங்கிணைப்பதோடு சர்வதேச அளவில் இத்திரைப்படத்தை முன்னிலைப்படுத்துவதிலும் திரைப்பட விழாக்களில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்துவதிலும் ஆதரவளிக்கும்.

திரைக்கதை உருவாக்கத்திற்கு அப்பால் எழுத்தாளர்களுக்கு ஆதரவளிப்பதிலும், திரைப்படத் தயாரிப்பு, சர்வதேச வெளியீட்டிற்கான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருவதிலும் இந்த பயிற்சித் திட்டத்தின் அர்ப்பணிப்பு மூலம் இத்திட்டம் பயிற்சி நிலையிலிருந்து சர்வதேச கூட்டாண்மை நிலைக்கு முன்னேறி இருப்பது உறுதிபடுத்துகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287578&reg=3&lang=1

 

***

SS/IR/GS/SH


(रिलीज़ आईडी: 2288091) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Telugu , Kannada , Malayalam