தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊக்குவிப்பு நடவடிக்கைகள் மூலம் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு அரசு ஆதரவு வழங்கி வருகிறது-மத்திய இணையமைச்சர் டாக்டர் எல் முருகன்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 4:15PM by PIB Chennai

திரைப்படங்கள் தொடர்பான, ஆய்வுக் கட்டுரைகள், தகவல் தொடர்பு, மேம்பாடு திட்டத்தின் கீழ், மத்திய அரசு, மண்டல அளவிலான திரைப்படத் தயாரிப்புக்குத் தேவையான நிதியுதவிகளை வழங்கி வருவதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதிலும் திரைப்படத் தயாரிப்பாளர்கள் பயன்பெறும் வகையிலும் மகாராஷ்டிரா மாநிலம் உட்பட இந்தியத் திரைப்பட சூழல் அமைப்பை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் வகையிலும் உலக அளவில் போட்டித் தன்மையை மேம்படுத்தும் வகையிலும் இந்த முன்முயற்சியை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.

இந்தியத் திரைப்படங்களை உலக அரங்கிற்குக் கொண்டு செல்லும் வகையில் திரைப்படத் தயாரிப்புக்கான சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்கு இது போன்ற முன்முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

திரைப்படத்துறையில் சர்வதேச சந்தை வாய்ப்புகளைப் பெறும் வகையில் இந்தியத் திரைப்படத் தயாரிப்பாளர்கள் முக்கியத்துவம் வாய்ந்த சர்வதேச திரைப்படத் திருவிழா மற்றும் திரைப்பட சந்தைகளில் பங்கேற்பதற்கான வாய்ப்புகளை வழங்குவதற்கும் அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் டாக்டர் எல் முருகன், எழுத்து மூலம் அளித்துள்ள பதிலில் இதனைத்  தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287703&reg=3&lang=1

****

TV/SV/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2288058) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Kannada , Malayalam