அணுசக்தி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2026 சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் இந்திய குழுவினர் சிறப்பாக செயல்பட்டனர்

प्रविष्टि तिथि: 22 JUL 2026 11:52AM by PIB Chennai

தேசிய ஒலிம்பியாட் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டு இந்தியாவின் அறிவியல் திறனாளர்களை உருவாக்குவதில் அணுசக்தித் துறை தமது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிபடுத்தியுள்ளது. 2026-ம் ஆண்டு நடைபெற்ற சர்வதேச இயற்பியல், வேதியியல், உயிரியல், கணித பிரிவு ஒலிம்பியாட் போட்டிகளில் மாணவர்கள் சிறப்பாக செயல்பட்டுள்ளனர். இச்சாதனைகள் இந்திய இளைஞர்களின் சிறப்பான திறனை வெளிப்படுத்துவதுடன் நாட்டின் மிகச் சிறப்பான இளம் திறனாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டி ஊக்கமளிக்க, பல ஆண்டுகளாக கவனத்துடன் உருவாக்கப்பட்ட தேசியக் கட்டமைப்பின் வலிமையையும் பிரதிபலிக்கின்றன. ஒலிம்பியாட் அணியின் இந்தக் குறிப்பிடத்தக்க வெற்றி இந்திய இளையோர் சக்தியையும் திறன்மிக்க இளம் மாணவர்கள் உலக அரங்கில் தங்களுடைய முழுதிறனையும் வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் நாடு மேற்கொண்டு வரும் நீடித்த முதலீட்டையும் வலுவாக பிரதிபலிக்கிறது.

சர்வதேச ஒலிம்பியாட் போட்டிகளில் 2026-ம் ஆண்டு ஒலிம்பியாட் நிகழ்வு இந்திய அணியின் செயல்பாட்டில் சிறப்புமிக்கத் தருணமாகும் நான்கு ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியக் குழுவினர் 12 தங்கம் 7 வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். இவற்றில் இயற்பியல், வேதியியல் பிரிவுகளில் தங்கப்பதக்கம் அனைத்தையும் வென்றதுடன் உயிரியல், கணிதப் பிரிவுகளில் சிறப்பாகச் செயல்பட்டனர்.  

இயற்பியல் பிரிவில் அனைத்து 5 தங்கப்பதக்கங்களையும் வேதியியல் பிரிவில் அனைத்து 4 தங்கப்பதக்கங்களையும், உயிரியல் பிரிவில் 1 தங்கம், 3 வெள்ளி பதக்கங்களையும் கணிதப் பிரிவில் 2 தங்கம், 4 வெள்ளி பதக்கங்களையும் இந்தியக் குழுவினர் வென்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2287554&reg=3&lang=

***

SS/IR/SM/KR


(रिलीज़ आईडी: 2287668) आगंतुक पटल : 11
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Gujarati , English , Urdu , Marathi , हिन्दी