நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஆபரேஷன் வஜ்ராவின் கீழ், 12 கோடி டிராமடால் ஹைட்ரோகுளோரைடு மாத்திரைகளின் சட்டவிரோத கடத்தலை மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு முறியடித்துள்ளது

प्रविष्टि तिथि: 20 JUL 2026 8:31PM by PIB Chennai

சுமார் 30 மெட்ரிக் டன் (30,000 கிலோ) எடையுள்ள, அதிக வீரியம் கொண்ட 120 மில்லியன் (12 கோடி) டிராமடால் ஹைட்ரோகுளோரைடு (250 மில்லிகிராம்) மாத்திரைகளின் சட்டவிரோதக் கடத்தலை நிதி அமைச்சகத்தின் வருவாய்த் துறையின் கீழ் செயல்படும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CBN), முறியடித்துள்ளது. மேலும், பெங்களூருவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் கொச்சியைச் சேர்ந்த இருவர் உட்பட மூன்று பேர் போதைப்பொருள்கள் - மனநிலை மயக்கப் பொருட்கள் சட்டம் (என்டிபிஎஸ்)-1985-இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர்.

'ஆபரேஷன் வஜ்ரா' என்று பெயரிடப்பட்ட இந்த நடவடிக்கை, பெங்களூரு, தில்லி மற்றும் கொச்சி ஆகிய இடங்களில் 2026 ஜூலை 10 முதல் 20 வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்பட்டது. குவாலியரில் உள்ள மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் தடுப்பு நடவடிக்கைக் குழுக்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வில், பெங்களூரு மற்றும் கொச்சியில் உள்ள வருவாய் புலனாய்வு இயக்குநரகம் (டிஆர்ஐ) மற்றும் இதர அமைப்புகளின் திறமையான ஒருங்கிணைப்பு இடம்பெற்றது.

ஆபரேஷன் வஜ்ராவின் வெற்றிகரமான செயலாக்கம், நாடுகடந்த ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராடுவதில், புலனாய்வு அடிப்படையிலான அமலாக்கம், முகமைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பு ஆகியவற்றின் செயல்திறனை அடிக்கோடிட்டுக் காட்டுவதுடன், என்டிபிஎஸ் சட்டத்தின் கீழ் இந்தியாவின் வலுவான ஒழுங்குமுறை கட்டமைப்பையும் பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2286819&reg=3&lang=1

****

TV/RB/RJ


(रिलीज़ आईडी: 2286870) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , Malayalam , English , Urdu , हिन्दी , Punjabi , Gujarati