கூட்டுறவு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொல்கத்தாவில் உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலைக்கான பூமி பூஜையில் நாளை மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா கலந்து கொள்கிறார்

प्रविष्टि तिथि: 18 JUL 2026 7:15PM by PIB Chennai

பிரதமர் திரு. நரேந்திர மோடியின் கூட்டுறவு மூலம் வளர்ச்சி என்ற தொலைநோக்குப் பார்வையையும், வெண்மைப் புரட்சி 2.0-இன் நோக்கங்களையும் முன்னெடுத்துச் செல்லும் வகையில், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. அமித் ஷா, ஜூலை 19, 2026 அன்று கொல்கத்தாவில் உள்ள நியூ டவுன் மாநாட்டு மையத்தில், அமுல் பெங்கால் பால் பண்ணைத் திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள உலகின் மிகப்பெரிய தயிர் உற்பத்தி ஆலைக்கான பூமி பூஜையில் கலந்து கொள்கிறார்.  மேற்கு வங்க முதல்வர் திரு. சுவேந்து அதிகாரி, பல பிரமுகர்கள் மற்றும் கூட்டுறவுத் துறை பிரதிநிதிகளுடன் இந்த நிகழ்வில் கலந்துகொள்வார்.

அமுல் நிறுவனம் மேற்கு வங்கத்தில் உள்ள ஹவுரா உணவுப் பூங்காவில் சுமார் ரூ 700 கோடி முதலீட்டில் அமுல் பெங்கால் பால் பண்ணைத் திட்டத்தை அமைத்து வருகிறது. இத்திட்டம் நிறைவடைந்தவுடன், ஒரு நாளைக்கு சுமார் 30 லட்சம் லிட்டர் பாலை கையாளும் திறனைக் கொண்டிருக்கும். இந்த ஆலை ஒவ்வொரு நாளும் சுமார் 1,000 மெட்ரிக் டன், அதாவது 10 லட்சம் கிலோகிராம், தயிர் மற்றும் பிற புளித்த பால் பொருட்களை உற்பத்தி செய்யும் திறனைக் கொண்டிருக்கும்.

இந்தத் திட்டத்தின் முன்மொழியப்பட்ட தினசரி உற்பத்தித் திறனில் 10 லட்சம் லிட்டர் பால் பேக்கேஜிங், 2 லட்சம் லிட்டர் பால் பதப்படுத்துதல், 1 லட்சம் லிட்டர் ஐஸ்கிரீம் உற்பத்தி, 20 மெட்ரிக் டன் பனீர், 10 மெட்ரிக் டன் நெய் மற்றும் 10 மெட்ரிக் டன் இனிப்புகள் ஆகியவை அடங்கும். கூடுதலாக, இந்த ஆலை சுமார் 2.5 லட்சம் நறுமணம் சேர்க்கப்பட்ட பால் பாக்கெட்டுகளையும் உற்பத்தி செய்யும் வகையில் கட்டமைக்கப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2286136&reg=3&lang=1

***

TV/PKV/PD


(रिलीज़ आईडी: 2286159) आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Gujarati , Odia , Kannada