ஜவுளித்துறை அமைச்சகம்
பாரத் டெக்ஸ் 2026 முன்னெப்போதும் இல்லாத வணிக வேகத்தையும் பெருந்திரளான மக்கள் வருகையையும் கொண்டுள்ளது
प्रविष्टि तिथि:
17 JUL 2026 3:11PM by PIB Chennai
புதுதில்லியில் உள்ள பாரத மண்டபத்தில் நடைபெறும் பாரத் டெக்ஸ் 2026 ஜவுளிக் கண்காட்சி முதல் 3 நாட்களில் முன்னெப்போதும் இல்லாத வணிக வேகத்தையும் பெருந்திரளான மக்கள் வருகையையும் கண்டுள்ளது. இந்தக் கண்காட்சி உலகளாவிய ஜவுளி, ஆயத்த ஆடைகள் தொழில்துறையின் குவி மையமாக மாறியுள்ளது.
இந்தக் கண்காட்சியின் போது 14,300 கோடி ரூபாய் அளவிற்கு ஜவுளித்துறை முதலீட்டு உறுதியளிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகாவிலும் பீகாரிலும் சுமார் 50,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு மாநிலங்களுடன் 30-க்கும் அதிகமான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
இந்தக் கண்காட்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் தமிழ்நாடு, கர்நாடகா, மத்தியப்பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் மூத்த அமைச்சர்களின் பங்கேற்போடு நியூசிலாந்து, இலங்கை, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளின் பங்கேற்பும் உள்ளது.
அடுத்த தலைமுறை ஜவுளித் தொழில்நுட்பத் தீர்வுகளை முன்னெடுக்கும் வகையில், கல்வியாளர்கள், தொழில்துறையினர், அரசுத்துறைகள் இடையே ஒத்துழைப்பை வெளிப்படுத்தும் முன்முயற்சிகளும் இந்தக் கண்காட்சியில் வெளிப்பட்டுள்ளன. இந்தக் கண்காட்சியின் சிறப்புமிக்க மைல்கல்லாக பாரத் டெக்ஸ் வர்த்தக கூட்டமைப்பு, உலகின் மிக முக்கியமான ஜவுளி, வடிவமைப்பு நிறுவனமான பிரீமியர் விஷன் பாரீஸ் இடையே ஒத்துழைப்புக்கான விருப்பக் கடிதம் கையெழுத்தாகியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285707®=3&lang=1
****
TV/SMB/KPG/SH
(रिलीज़ आईडी: 2285922)
आगंतुक पटल : 9