இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ஊக்கமருந்து தடுப்புச் சட்டங்களின் அமலாக்கத்தை மத்திய அரசு அரசிதழில் அறிவித்துள்ளது

प्रविष्टि तिथि: 17 JUL 2026 12:58PM by PIB Chennai

தேசிய ஊக்கமருந்து தடுப்புச் சட்டம் 2022, தேசிய ஊக்கமருந்து தடுப்புச் திருத்தச்சட்டம் 2025 ஆகியவற்றின் அமலாக்கம் பற்றிய அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  நேர்மையான  விளையாட்டுக்குரிய நிறுவன கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இந்த நடவடிக்கை குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.

இந்தியாவின் இந்த ஊக்கமருந்து தடுப்புச் சட்டங்கள் கட்டமைப்பு உலக ஊக்கமருந்து தடுப்புச் சட்டங்களுக்கு இணங்க இருப்பதுடன் விளையாட்டில் ஊக்கமருந்துக்கு எதிரான யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டுக் கடமைகளை  நிறைவேற்றுவதாகவும் உள்ளன. நிறுவன சுதந்திரத்தை வலுப்படுத்துதல், நடைமுறை பாதுகாப்புகளை விரிவாக்குதல், பிரச்சனைக்கான தீர்வு நடைமுறைகளை முறைப்படுத்துதல், நம்பகத்தன்மையை உறுதி செய்தல், இந்தியாவின் ஊக்கமருந்துத் தடுப்புத் திட்டத்தை பயனுள்ள வகையில் செயல்படுத்துதல் ஆகியவை இந்தச் சட்டங்களின் நோக்கங்களாகும்.

இந்தச் சட்டங்கள் நடைமுறைக்கு வருவது விளையாட்டில் வெளிப்படைத்தன்மை, நியாயமான, விளையாட்டு வீரர்களை மையமாகக் கொண்ட ஊக்கமருந்து தடுப்பு சூழல் அமைப்பை வலுப்படுத்துதல் ஆகியவற்றில் அரசின் அசைக்க முடியாத உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது. சட்ட ரீதியான கட்டமைப்பை வலுப்படுத்துவது நேர்மையின் மாண்புகளை, விளையாட்டில் நியாயமான, மேன்மையான தன்மையை ஊக்குவிப்பதிலும் இந்தியாவின் உறுதிப்பாட்டை மேலும்  வளர்க்கிறது. தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் சமநிலையில் இந்திய விளையாட்டு வீரர்கள் போட்டியில் ஈடுபடுவதை இந்தச் சட்டங்கள் உறுதி செய்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2285647&reg=3&lang=1

***

SS/SMB/KPG/KR


(रिलीज़ आईडी: 2285685) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Kannada