விவசாயத்துறை அமைச்சகம்
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் 98வது நிறுவன நாள் விழா: மத்திய வேளாண்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்பு
प्रविष्टि तिथि:
16 JUL 2026 8:37PM by PIB Chennai
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் 98வது நிறுவன நாள் விழா, புதுதில்லியில் உள்ள என்.ஏ.எஸ்.சி வளாகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு. சிவராஜ் சிங் சௌகான் கலந்துகொண்டு, 2047-ஆம் ஆண்டிற்குள் ஒரு வளர்ந்த இந்தியாவை உருவாக்க, ‘வளர்ந்த வேளாண்மை மற்றும் வளமான விவசாயிகள்’ எனும் விரிவான செயல்திட்டத்தை முன்வைத்தார்.
அமைச்சர் பேசுகையில், "விவசாயிகள் வேளாண்மையின் ஆன்மா என்றால், விஞ்ஞானிகள் அதன் மூளை. அரசின் கொள்கைகள், விவசாயிகளின் கடின உழைப்பு மற்றும் விஞ்ஞானிகளின் அறிவுத்திறன் ஆகியவை ஒருங்கிணைந்தால் மட்டுமே வேளாண்மையில் அதிசயங்கள் நிகழும்" என்று கூறினார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், நவீன தொழில்நுட்பங்களை அடிமட்ட அளவில் கொண்டு செல்லவும் 7 முக்கிய இலக்குகளை அவர் அறிவித்தார். குறிப்பாக, பருவநிலை மாற்றத்தைத் தாங்கும் 100 கிராமங்களை உருவாக்குதல், போலி விதைகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைத் தடுக்கக் கடுமையான சட்டங்களை அமல்படுத்துதல் மற்றும் 10 கோடி விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பங்களைச் சென்றடையச் செய்தல் போன்றவை இதில் அடங்கும்.
மேலும், வேளாண் ஆராய்ச்சிக் கவுன்சிலின் எதிர்கால வளர்ச்சிக்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 10,000 கோடி ரூபாய் அளவிற்கு உள்நாட்டு நிதி ஆதாரத்தை உருவாக்கவும், டிஜிட்டல் அறிவுத் தளத்தை ஏற்படுத்தவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில், நோய் எதிர்ப்பு மற்றும் அதிக மகசூல் தரும் 43 புதிய பயிர் ரகங்கள் மற்றும் 17 புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
சுமார் 150-க்கும் மேற்பட்ட ஊழியர்களுக்குப் பணி நிரந்தரம் வழங்கப்பட்டதும் இந்த விழாவின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்தது. இத்தகைய ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம், இந்திய வேளாண்மை உலகத் தரம் வாய்ந்ததாகவும், ஏற்றுமதி சார்ந்ததாகவும் மாறி, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப்பெரிய தூணாக அமையும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2285536®=3&lang=1
***
TV/VK/RJ
(रिलीज़ आईडी: 2285593)
आगंतुक पटल : 6