ஜவுளித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பாரத் டெக்ஸ் 2026 சர்வதேச ஜவுளிக் கண்காட்சி: மத்திய அமைச்சர் திரு கிரிராஜ் சிங் தொடங்கி வைத்தார்

प्रविष्टि तिथि: 14 JUL 2026 7:24PM by PIB Chennai

மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங், இந்தியாவின் மிகப்பெரிய ஜவுளித்துறை நிகழ்வான பாரத் டெக்ஸ் 2026 கண்காட்சியை புதுதில்லி பாரத் மண்டபத்தில் இன்று தொடங்கி வைத்தார். மத்திய ஜவுளி அமைச்சகத்தின் ஆதரவுடன், பாரத் டெக்ஸ் வர்த்தக கூட்டமைப்பு இக்கண்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. உலகளாவிய நுகர்வோர்கள், தொழில்துறை தலைவர்கள், முதலீட்டாளர்கள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட நிகழ்வு, உலகளாவிய ஜவுளி மதிப்பு சங்கிலியில் இந்தியாவின் உற்பத்தித் திறனை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.

சுமார் 130 நாடுகளைச் சேர்ந்த 6,000-க்கும் மேற்பட்ட நுகர்வோர்கள், வர்த்தகத்துறையைச் சார்ந்த 1.3 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்கள் இக்கண்காட்சியில் பங்கேற்றுள்ளனர். இதில் தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் ஆதரவு வழங்கும் மாநிலங்களாகப் பங்கேற்று தங்களின் தொழில் உள்கட்டமைப்பை காட்சிப்படுத்தியுள்ளன. மாநாட்டின் ஒரு பகுதியாக, இந்திய ஜவுளித் தொழிலை ஐரோப்பிய சந்தையுடன் இணைக்கும் வகையில் பாரத் டெக்ஸ் வர்த்தக கூட்டமைப்பு, பிரீமியர் விஷன் பாரிஸ் அமைப்புடன் முக்கிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. பிரதமரின் ஜவுளித்துறைக்கான தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, உலக அளவில் இந்தியாவின் வர்த்தகத்தை விரிவுபடுத்த இக்கண்காட்சி உதவும்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284603&reg=3&lang=1

****

TV/PD/SH

 


(रिलीज़ आईडी: 2284671) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Gujarati , Malayalam