வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா–மாலத்தீவு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் முதல் சுற்று வெற்றிகரமாக நிறைவடைந்தது

प्रविष्टि तिथि: 14 JUL 2026 4:06PM by PIB Chennai

இருதரப்பு வர்த்தகம், முதலீட்டு ஈடுபாட்டை விரிவுபடுத்துவதில் ஒரு முக்கிய நடவடிக்கையாக, இந்தியா–மாலத்தீவு தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கான முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தப் பேச்சுவார்த்தை 2026 ஜூன் 29 முதல் ஜூலை 7 வரை காணொலிக் காட்சி முறையில் நடைபெற்றது.

 

இந்தியத் தரப்புப் பேச்சுவார்த்தைக் குழுவிற்கு, வர்த்தகத் துறையின் இணைச் செயலாளரும் தலைமைப் பேச்சுவார்த்தையாளருமான திரு உஜ்வல் குமார் கோஷ் தலைமை தாங்கினார். அதேசமயம், மாலத்தீவு தூதுக்குழுவிற்கு அதன் தலைமைப் பேச்சுவார்த்தையாளர் திரு யூசுப் ரிசா தலைமை தாங்கினார்.

 

முதல் சுற்றின் போது, ​​இரு தரப்பு பேச்சுவார்த்தைக் குழுக்களும் எட்டு கொள்கைப் பகுதிகளை உள்ளடக்கிய எட்டு தொழில்நுட்ப அமர்வுகளில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டன. இரு தரப்பினரும் பேச்சுவார்த்தைப் பாதைகள் முழுவதும் கணிசமான முன்னேற்றம் கண்டதுடன், பல பிரச்சனைகளில் ஒருமித்த கருத்தையும் எட்டினர்.

2026 ஜூலை 8 அன்று, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மாலத்தீவின் பொருளாதார மேம்பாடு, போக்குவரத்து மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் திரு முகமது சயீத்தை சந்தித்தார். இந்தியா-மாலத்தீவு தடையற்ற வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகள் உட்பட, நடைபெற்று வரும் இருதரப்பு பொருளாதார முன்னெடுப்புகளின் முன்னேற்றத்தை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இந்தியாவும் மாலத்தீவும் தங்களது 60 ஆண்டுகால தூதரக உறவுகளைக் கொண்டாடும் வேளையில், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்  ஆகியவற்றை விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தங்களது உறுதிப்பாட்டை இரு தரப்பினரும் மீண்டும் வலியுறுத்தினர்.

 

முன்மொழியப்பட்ட இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம், சந்தை அணுகலை மேம்படுத்துதல், முதலீட்டை எளிதாக்குதல், பரந்த பொருளாதார ஒத்துழைப்பை ஊக்குவித்தல், இரு நாடுகளிலும் நிலையான பொருளாதார வளர்ச்சிக்குப் பங்களித்தல் ஆகியவற்றின் மூலம் இருதரப்பு பொருளாதார, வர்த்தக உறவுகளை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2284467&reg=3&lang=1

****

SS/SMB/SH


(रिलीज़ आईडी: 2284594) आगंतुक पटल : 16
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Gujarati , Malayalam