தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சேவை மற்றும் பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஒதுக்கீடு செய்யப்பட்ட சிறப்பு எண்கள் குறித்து ட்ராய் விளக்கம்

प्रविष्टि तिथि: 10 JUL 2026 4:05PM by PIB Chennai

சேவை மற்றும் பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஒதுக்கீடு செய்யப்பட்ட 1600 தொடர்கள், 140 தொடர்களின் செயல்பாடு பற்றி சில அச்சு மற்றும், காட்சி ஊடகங்களில் கருத்துகள் வெளியிடப்பட்டுள்ளன. இவை, ஒதுக்கீடு செய்யப்பட்ட இந்தத் தொடர்களின் செயல்பாடு குறித்து தவறான தகவல் அல்லது தவறான விளக்கத்திற்கு வழிவகுக்கக்கூடும். சரியான ஒழுங்குமுறை தொடர்பான விளக்கம், இந்திய தொலைத்தொடர்பு ஆணையத்தால் அளிக்கப்பட்டுள்ளது.

முறைப்படுத்தப்பட்ட வங்கி, நிதிச்சேவை, காப்பீட்டு துறையின் வாடிக்கையாளர்களுக்கான சேவை, பரிவர்த்தனைக்கும், அரசு நிறுவனங்களால் அரசுக்கும், குடிமக்களுக்குமான தொடர்புக்கும் 1600 தொடர் எண்கள் பயன்பாட்டை டிராய் கட்டாயமாக்கியுள்ளது.

மற்ற துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மேம்பாட்டு அழைப்புகளுக்கு 140 தொடர் எண்களின் பயன்பாட்டை டிராய் கட்டாயமாக்கியுள்ளது. இத்தகைய நிறுவனங்கள், தொலைத்தொடர்பு சேவை வழங்குவோரிடம் பதிவு செய்துகொள்ள வேண்டும். இடையூறு செய்ய வேண்டாம் என்ற பதிவில் தடை செய்வது தவிர 140 தொடர்களில் இருந்து அழைப்புகளை டேகிங் அல்லது பில்டரிங் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2283309&reg=3&lang=1   

***

TV/SMB/RJ/SH


(रिलीज़ आईडी: 2283419) आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Kannada , English , Gujarati , Urdu , हिन्दी , Marathi , Bengali