இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
2028 ஒலிம்பிக்கிற்கான வீரர்கள் தேர்வு வழிமுறையை தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், ஜூலை 15-க்குள் வெளியிட வேண்டும் - மத்திய விளையாட்டு அமைச்சகம்
प्रविष्टि तिथि:
09 JUL 2026 5:32PM by PIB Chennai
லாஸ் ஏஞ்சல்ஸில் 2028-ம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளுக்கான விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின்பற்றப்பட வேண்டிய அளவுகோல்கள், செயல்முறை உள்ளிட்ட ஒலிம்பிக் தகுதிகள், தேர்வு வழிமுறைகள் ஆகியவற்றை வரும் ஜூலை 15-ம் தேதிக்குள் வெளியிடுமாறு, மத்திய விளையாட்டு அமைச்சகம் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளுக்கும் உத்தரவிட்டுள்ளது.
ஒலிம்பிக், பாராலிம்பிக், ஆசிய விளையாட்டுப் போட்டிகள், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் போன்ற மாபெரும் விளையாட்டு நிகழ்வுகளுக்கான தேர்வுக் கொள்கை தகுதி அளவுகோல்கள் ஆகியவை அந்தந்தப் போட்டிகள் தொடங்குவதற்கு குறைந்தது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, சம்பந்தப்பட்ட தேசிய விளையாட்டு கூட்டமைப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பதிவேற்றப்பட வேண்டும் என்று அமைச்சகம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
தேர்வுக் கொள்கை, தகுதிகள் ஆகியவை தேசிய விளையாட்டுக் கூட்டமைப்புகளின் உறுப்புப் பிரிவுகள், இந்திய விளையாட்டு ஆணையம் ஆகியவற்றுக்குப் பகிரப்பட வேண்டும்.
லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகள், 2028 ஜூலை 14 முதல் 30 வரை நடைபெறவுள்ளது.
லாஸ் ஏஞ்சல்ஸ் 2028 ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பான விவரங்கள் பின்வரும் இணையதள இணைப்பில் உள்ளன: https://www.olympics.com/ioc/documents/olympic-games/los-angeles-2028-olympic-games
அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய விளையாட்டு கூட்டமைப்புகளும், ஒலிம்பிக் போட்டிகளுக்கான விளையாட்டு வீரர்களைத் தேர்ந்தெடுப்பதற்குப் பின்பற்றப்பட வேண்டிய அளவுகோல்கள், செயல்முறைகள் உள்ளிட்ட ஒலிம்பிக் தகுதி, தேர்வு வழிமுறையை, 2026 ஜூலை 15-ஆம் தேதிக்கு முன்னதாக, உடனடியாகத் தங்களது அதிகாரப்பூர்வ இணையதளங்களில் வெளியிடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
தேசிய விளையாட்டு கூட்டமைப்புகள், தங்களோடு இணைந்த அனைத்து மாநில, யூனியன் பிரதேச சங்கங்களுடன் தேர்வு வழிமுறையைப் பகிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282924®=3&lang=1
(Release ID : 2282924)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2283083)
आगंतुक पटल : 9