பிரதமர் அலுவலகம்
ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரலுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
இடுகை இடப்பட்ட நாள்:
09 JUL 2026 1:55PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (09.07.2026) மெல்போர்னில் ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜெனரல் திருமதி சாம் மோஸ்டின் ஏசி-யைச் சந்தித்தார்.
இந்தியா-ஆஸ்திரேலியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பின் ஆழம், பன்முகத்தன்மை ஆகியவை குறித்து இரு தலைவர்களும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான வளர்ந்து வரும் பொருளாதார ஒத்துழைப்பை அவர்கள் வரவேற்றனர். மேலும், விரிவடைந்து வரும் வர்த்தகம், முதலீடு, கல்வி, புத்தாக்கத் தொடர்புகள் ஆகியவை புதிய வாய்ப்புகளை உருவாக்கி, இரு நாட்டு மக்களுக்கும் உறுதியான பலன்களை வழங்கும் என்று இருவரும் நம்பிக்கை தெரிவித்தனர். இரு நாடுகளுக்கும் இடையிலான வளர்ந்து வரும் விளையாட்டுத் தொடர்புகள் குறித்தும் இரு தலைவர்களும் திருப்தி தெரிவித்தனர். அத்துடன், இந்தியாவில் நடைபெறவுள்ள 2030 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள், ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள 2032 ஒலிம்பிக் போட்டிகள் ஆகியவற்றை முன்னிட்டு, மேலும் நெருங்கிய ஒத்துழைப்புக்கு அவர்கள் அழைப்பு விடுத்தனர்.
இரு நாடுகளுக்கும் இடையேயான வலுவான மக்கள் தொடர்புகள், இருதரப்பு உறவுக்குத் தொடர்ந்து பலமாக விளங்குகின்றன என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்தியா-ஆஸ்திரேலியா உறவுகளை மேம்படுத்துவதில் கவர்னர் ஜெனரல் மோஸ்டின் வழங்கிய உறுதியான ஆதரவை பிரதமர் பாராட்டினார்.
(Release ID : 2282773)
****
TV/PLM/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2283054)
வருகையாளர் எண்ணிக்கை : 54
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam