குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

மீன்வளத்தை, அறிவியல் - தொழில்நுட்பத்துடன் கூடிய ஒரு நவீனத் தொழிலாக இளைஞர்கள் பார்க்க வேண்டும்: குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதா கிருஷ்ணன்

प्रविष्टि तिथि: 09 JUL 2026 1:32PM by PIB Chennai

குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன்இன்று புவனேஸ்வரில் ஆழ்கடலில் மீன்வளத்தை நிலையான முறையில் பயன்படுத்துவதற்கான அங்கீகாரக் கடிதங்களை வழங்கும் தேசியத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில்அவர் ஒடிசா ஆழ்கடல் மீன்பிடி இயக்க ஆவணத்தை வெளியிட்டார். அத்துடன் நாடு முழுவதிலுமிருந்து பத்து மீன் உற்பத்தியாளர் அமைப்புகளுக்கும் மீனவர்களுக்கும் ஆழ்கடல் மீன்பிடித்தலுக்கான அங்கீகாரக் கடிதங்களையும் வழங்கினார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்இந்த முயற்சிஆழ்கடலின் பரந்த ஆற்றலை நிலையான முறையில் பயன்படுத்த வழிவகுக்கும் என்றார். இதன் மூலம் இந்தியாவின் கடல்சார் பயணத்தில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று அவர் கூறினார். இந்தத் திட்டம்மீன்வளத் துறையில் வளர்ச்சிநிலைத்தன்மைசெழிப்பு ஆகியவை அடங்கிய ஒரு புதிய சகாப்தத்தைக் கொண்டுவருவதற்கான கூட்டு உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்தியா 11,000 கிலோமீட்டருக்கும் அதிகமான கடற்கரையையும்ஏறக்குறைய 24 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவுள்ள பிரத்தியேகப் பொருளாதார மண்டலத்தையும் கொண்டுள்ளது என்றும்இங்குள்ள அளவற்ற கடல் வளம் பெருமளவில் பயன்படுத்தப்படாமல் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். பாரம்பரியமாக மீன்பிடி நடவடிக்கைகள் கடற்கரைக்கு அருகிலேயே இருந்து வந்தாலும்இந்த புதிய கட்டமைப்புசூரை மீன் போன்ற அதிக மதிப்புள்ள இனங்களை நிலையான முறையில் பயன்படுத்துவதற்காகஇந்திய மீனவர்கள் நம்பிக்கையுடன் ஆழ்கடலுக்குள் செல்ல வழிவகுக்கும் என்று அவர் கூறினார்.

இந்தியாவின் மீன்வளத் துறையின் விரைவான வளர்ச்சியை எடுத்துரைத்த குடியரசு துணைத்தலைவர்இந்தியா இப்போது உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தி நாடாக உள்ளது என்றும்உலகளாவிய மீன் உற்பத்தியில் சுமார் எட்டு சதவிகிதப் பங்களிப்பை வழங்குகிறது என்றும் கூறினார். இத்துறை கிட்டத்தட்ட மூன்று கோடி மீனவர்கள்மீன் வளர்ப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கு ஆதரவளிக்கிறது என்றும்கடந்த நிதியாண்டில் கடல் உணவு ஏற்றுமதி ரூ.73,000 கோடியைத் தாண்டியது என்றும் அவர் குறிப்பிட்டார். 'ஹை சீஸ்எனப்படும் ஆழ்கடல் மீன்பிடித்தல் முன்முயற்சியானது இந்தியாவின் ஏற்றுமதித் திறனை மேலும் வலுப்படுத்தும் என்றும்பதனப்படுத்துதல்குளிரூட்டப்பட்ட விநியோக நடவடிக்கைகள்போக்குவரத்துஏற்றுமதி சேவைகள் ஆகிய துறைகளில் வேலைவாய்ப்பை உருவாக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். அறிவியல்தொழில்நுட்பம்புத்தாக்கம்உலகளாவிய வாய்ப்புகள் ஆகியவற்றால் இயக்கப்படும் ஒரு நவீனத் தொழிலாக மீன்பிடித் தொழிலைக் கருதுமாறு இளைஞர்களை அவர் கேட்டுக்கொண்டார். 

இந்த நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் திரு ஹரி பாபு கம்பம்பதிஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஜி, மத்திய மீன்வளம்கால்நடை வளர்ப்புபால்வளத் துறை அமைச்சர் திரு ராஜீவ் ரஞ்சன் சிங்மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய மீன்வளத் துறை இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282766&reg=3&lang=1

***

SS/PLM/SH


(रिलीज़ आईडी: 2283018) आगंतुक पटल : 20
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Odia , Telugu , Malayalam