பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகளிர் சார்ந்த செயல்பாட்டு பிரிவின் கீழ் கூட்டறிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன் பிரிக்ஸ் பெண் அமைச்சர்கள் கூட்டம் கொச்சியில் நிறைவடைந்தது

प्रविष्टि तिथि: 09 JUL 2026 4:24PM by PIB Chennai

இந்தியாவின் பிரிக்ஸ் தலைமைத்துவம் 2026-ன் கீழ் கொச்சியில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் பெண் அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் இன்று நிறைவடைந்தது. மகளிர் தலைமையிலான வளர்ச்சியை மேம்படுத்துவதில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் இது முக்கிய மைல்கல்லாக அமைந்தது. 2026 ஜூலை 6 முதல் 9-ம் தேதி வரை 4 நாட்கள் நடைபெற்ற நிகழ்வில் பிரிக்ஸ் மகளிர் பணிக்குழுக் கூட்டம், பிரிக்ஸ் பெண் அமைச்சர்கள் நிலையிலான கூட்டம் ஆகியவை நடைபெற்றன.

பாலின சமத்துவம், மகளிருக்கு அதிகாரமளித்தல் ஆகியவற்றை முன்னெடுப்பதற்கான முன்னுரிமைகள் குறித்து விவாதிக்க பிரிக்ஸ் அமைப்பைச் சேர்ந்த அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் ஒன்றிணைந்தனர்.

இந்த நிறைவு அமர்வில் உரையாற்றிய மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் திரு அன்னபூர்ணா தேவி, பிரிக்ஸ் உறுப்பு நாடுகள் பல்வேறு புவியியல், சமூகப் பொருளாதாரம், கலாச்சாரப் பின்னணிகளை சேர்ந்தவைகளாக இருந்தாலும் மகளிருக்கு அதிகாரமளித்தல் குறித்த பல்வேறு பொதுவான தகவல்களைக் கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282843&reg=3&lang=1

****

TV/IR/KPG/SH

 


(रिलीज़ आईडी: 2282979) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Gujarati , Telugu , Malayalam