சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நவி மும்பை விமான நிலையம் மருந்துகளை இறக்குமதி செய்யும் நிலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது

प्रविष्टि तिथि: 08 JUL 2026 10:43AM by PIB Chennai

மருந்து விநியோக முறையை வலுப்படுத்துவது, வர்த்தகத்தை எளிதாக்குவது ஆகியவற்றின் முக்கிய நடவடிக்கையாக அண்மையில் தொடங்கப்பட்ட மகாராஷ்டிராவின் நவி மும்பை விமான நிலையம் மூலம் மருந்துகளை இறக்குமதி செய்ய மத்திய சுகாதாரம், குடும்பநல அமைச்சகம் வழி வகை செய்துள்ளது.

மருந்துகள் விதிமுறைகள், 1945-ன் விதி 43ஏ-ல் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின்படி மருந்துகளை இறக்குமதி செய்யும் விமான நிலையங்களின் பட்டியலில் நவி மும்பை சேர்க்கப்பட்டுள்ளது. மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள் சட்டம் 1940-ன் விதிமுறையின் கீழ், மருந்துத் தொழில்நுட்ப ஆலோசனை வாரியத்துடன் ஆலோசிக்கப்பட்ட பிறகு இந்த அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இந்தத் திருத்தத்தின் மூலம், நாட்டில் மருந்துகள் இறக்குமதி செய்யப்படும் வழிவகைகளின் (சாலை, ரயில், கப்பல், விமானம்) எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.  இந்தத் திருத்தம் மருந்துப் பொருட்களின் விநியோகத்தை எளிதாக்கவும் சரக்குப் போக்குவரத்துக் கட்டமைப்பை வலுப்படுத்தவும், இறக்குமதியாளர்களுக்கு நெகிழ்வுத் தன்மையை வழங்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முன்முயற்சி எளிதாக வர்த்தகம் செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்ற அரசின் தொடர் முயற்சிகளுடன் ஒத்துப் போகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2282329&reg=3&lang=1 

***

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2282483) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Telugu