பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – தென்கொரியாவும் இடையே எரிசக்தி ஆதாரப் பாதுகாப்பு குறித்த கூட்டு அறிக்கை

प्रविष्टि तिथि: 20 APR 2026 10:56PM by PIB Chennai

இந்தியாவும்,  தென் கொரியாவும் வெளிப்படையான, உள்ளடக்கிய மற்றும் செழிப்பான இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை நோக்கிய ஒரே பார்வையைப் பகிர்ந்து கொள்ளும் சிறப்பு உத்திசார் கூட்டாண்மை நாடுகள் ஆகும்.

நமது சிறப்பு உத்திசார் கூட்டாண்மையின் மையத் தூண், திறந்த சந்தைகள் மற்றும் விதிமுறைகளின் அடிப்படையிலான வர்த்தகத்தை மேற்கொள்வதற்கான பகிர்ந்த உறுதிப்பாட்டைக் கொண்டவையாகும். இதில், நிலைநிறுத்தப்பட்ட நீண்டகால மற்றும் நம்பகமான பொருளாதார மற்றும் எரிசக்தி ஆதாரக் கூட்டுறவை இருநாடுகளும் கொண்டுள்ளன.  இது நமது செழிப்பு மற்றும் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு ஆதாரமாக உள்ளது. இத்தகைய பகிர்ந்த கொள்கைகளை மீண்டும் உறுதிப்படுத்தி, தற்போதைய சூழ்நிலை தொழில்கள் மற்றும் சந்தைகளில் ஏற்படுத்தும் தாக்கத்தைப் புரிந்து கொள்வது இந்நேரத்தில் மிகவும் அவசியமானதாகும்.

இந்தியா தென் கொரியக் இடையிலான முழுமையான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தம் (சிஇபிஏ) மற்றும் தொடர்புடைய இருதரப்பு அமைப்புகளின் மூலம் எரிசக்தி வள வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த நாம் முயற்சிக்கிறோம். தென் கொரியாவுக்கு, நாப்தா மற்றும் பிற பெட்ரோலிய மூலப்பொருட்களின் முக்கிய வழங்குநராக இந்தியா உள்ளது. அதே சமயம், இந்தியாவுக்கு பெட்ரோலியத் தயாரிப்புகள்,  உயவு (லூப்ரிக்கேண்ட்) அடிப்படை எண்ணெய்களின் முன்னணி வழங்குநராக தென் கொரியா உள்ளது.

எரிசக்தி வள விநியோக சங்கிலியின் மீள்திறனை வலுப்படுத்துவதற்கு, பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துதல், எரிசக்தி மாற்றத்தை விரைவுபடுத்துதல், தடையற்ற வர்த்தக ஒழுங்குகளை ஆதரித்தல் ஆகியவற்றின் மூலம் ஒன்றிணைந்து செயல்பட நாம் உறுதிபூண்டுள்ளோம். முக்கிய எல்என்ஜி நுகர்வோர் நாடுகளாக, சந்தை நிலைத்தன்மை, வெளிப்படைத் தன்மை மற்றும் வாங்குபவர்களின் பார்வையைச் சிறப்பாக பிரதிபலிக்கும் வகையில் நெருங்கிய ஒத்துழைப்பை ஆராய வேண்டிய அவசியத்தை நாம் உணர்கிறோம்.

எரிசக்தி துறையில் மீள்திறன் வாய்ந்த வர்த்தகத்திற்கு நமது பகிர்ந்த உறுதிப்பாட்டை நாம் ஏற்றுக் கொள்கிறோம். கப்பல் கட்டுமானம் உள்ளிட்ட மீள்திறன் கொண்ட கடல் கட்டமைப்பு, இரு நாடுகளின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்ய முக்கியமானது என்பதை நாம் உணர்கிறோம். பாதுகாப்பான, நம்பகமான மற்றும் திறமையான எரிசக்தி போக்குவரத்துக்கு வலுவான மற்றும் பல்துறை கப்பல் கட்டுமான சூழல் அவசியமானது என்பதை நாம் ஒப்புக்கொள்கிறோம்.

இந்நிலையில், இந்தியாவும் தென் கொரியாவும் பின்வருமாறு செயல்பட முனைவதாக அறிவிக்கின்றன:

நாப்தா மற்றும் பிற பெட்ரோலிய தயாரிப்புகளில் வெளிப்படையான வர்த்தகத்தை நிலைநிறுத்தும் முயற்சிகள் உட்பட, ஒருவருக்கொருவர் நிலையான, பாதுகாப்பான மற்றும் நம்பகமான எரிசக்தி வள விநியோகத்தை உறுதி செய்தல். மேலும் முழு எரிசக்தி மதிப்புச் சங்கிலியில் ஒத்துழைப்பு.

    எல்என்ஜி நுகர்வு நாடுகளுக்கு இடையிலான நெருங்கிய ஒத்துழைப்பை ஆராய்தல்.

    கப்பல் கட்டுமானத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல். கப்பல் தளங்களின் மேம்பாடு, மனிதவள மேம்பாடு மற்றும் தொழில்நுட்ப கூட்டாண்மை போன்றவற்றை உட்படுத்தி இந்தியாவில் கப்பல் தளங்கள் அமைத்தல்,

உலகளாவிய எரிசக்தி வள விநியோகச் சங்கிலிகள் வெளிப்படையான நிலையில் தொடர்வதை உறுதி செய்வதற்காக பிராந்தியக் கூட்டு நாடுகள் இணைந்து செயல்பட வேண்டும் என்று இந்தியாவும் தென் கொரியாவும் அழைப்பு விடுக்கின்றன.  இது நமது மக்களின் பாதுகாப்புக்கும் செழிப்புக்கும் அவசியமானதாகும்.

***

(Release ID: 2253979)

SS/PKV/RJ


(रिलीज़ आईडी: 2281476) आगंतुक पटल : 24
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam