பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
தூய்மையான, உயர் செயல்திறன் கொண்ட இ 20 எரிபொருள், பழைய வாகனங்களில் கடுமையான சோதனைகளுக்குப் பிறகே நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது: துறைசார் நிபுணர்கள்
प्रविष्टि तिथि:
04 JUL 2026 8:16PM by PIB Chennai
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, கனரகத் தொழில்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ஆகிய துறைகளின் அமைச்சகங்கள் இணைந்து புது தில்லியில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தின. இதில் எரிசக்தி மற்றும் வாகனத் துறைகளைச் சேர்ந்த முன்னணி நிபுணர்கள், 'இ 20' எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டம் குறித்து ஊடகங்களிடம் விளக்கமளித்தனர். எத்தனால் கலப்பு என்பது ஒரு சீரான, அறிவியல் பூர்வமான மற்றும் படிப்படியான செயல்முறை என்பது இதில் வலியுறுத்தப்பட்டது. மேலும், இ 20 எரிபொருளால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படாது என்பதால் வாகன உரிமையாளர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றும் உறுதியளிக்கப்பட்டது.
இந்த சந்திப்பில், இன்ஜினியர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் மேலாண் இயக்குநருமான திருமதி வர்த்திகா சுக்லா, டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (TKM) நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாகத் துணைத் தலைவர் திரு விக்ரம் குலாட்டி; மாருதி சுஸுகி நிறுவனத்தின் பெருநிறுவன விவகாரங்களுக்கான மூத்த நிர்வாக அதிகாரி திரு ராகுல் பார்தி; ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி திரு அசுதோஷ் வர்மா; டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் திரு பிரசாத் கிருஷ்ணன்; ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தின் இணைத் துணைத் தலைவர் திரு புனீத் ஆனந்த் மற்றும் பஜாஜ் ஆட்டோ லிமிடெட் நிறுவனத்தின் வணிகப் பிரிவின் விற்பனைத் தலைவர் (வடக்கு மற்றும் கிழக்கு மண்டலம்) திரு மன்பிரீத் சிங் பிந்த்ரா ஆகியோர் உரையாற்றினர்.
இ 20 திட்டத்தின் மீதான துறையின் கூட்டு நம்பிக்கையையும், நுகர்வோரின் கேள்விகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் பதிலளிப்பதற்கான அதன் உறுதிப்பாட்டையும் வல்லுனர்கள் மீண்டும் வலியுறுத்தினர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2281142®=3&lang=1
***
TV/RB/RJ
(रिलीज़ आईडी: 2281229)
आगंतुक पटल : 9