பிரதமர் அலுவலகம்
கொரிய அதிபருடனான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரின் அறிக்கை
प्रविष्टि तिथि:
20 APR 2026 6:54PM by PIB Chennai
மேன்மை தங்கிய அதிபர் லீ அவர்களே,
இரு நாடுகளிலிருந்தும் வந்துள்ள சிறப்பு விருந்தினர்களே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
இந்தியாவுக்கு தனது முதல் வருகையை மேற்கொள்ளும் அதிபரை வரவேற்பதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. அவரது வாழ்க்கை, பொறுமை, சேவை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக உள்ளது. அவர் எதிர்கொண்ட ஒவ்வொரு சவாலும், மக்களுக்கு சேவை செய்யும் அவரது உறுதியை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
நண்பர்களே,
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கொரியா தலைவரின் இந்தியா வருகை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஜனநாயக மதிப்புகள், சந்தை பொருளாதாரம், சட்டத்தின் ஆட்சி ஆகியவை எங்கள் இரு நாடுகளின் அடிப்படையிலேயே ஆழமாகப் பதிந்துள்ளன. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பற்றிய ஒரே பார்வையையும் நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இந்தப் பொதுக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு, கடந்த ஒரு தசாப்தத்தில் எங்கள் உறவு மேலும் வலுவாகவும் விரிவாகவும் மாறியுள்ளது.
இன்று அதிபரின் இந்த வருகையுடன், நம்பிக்கையுடன் கூடிய இந்த கூட்டாண்மையை எதிர்கால நோக்குடன் கூடிய கூட்டாண்மையாக மாற்ற நாம் தயாராக இருக்கிறோம். சிப் முதல் கப்பல்கள் வரை, திறமை முதல் தொழில்நுட்பம் வரை, சுற்றுச்சூழல் முதல் ஆற்றல் வரை—அனைத்து துறைகளிலும் புதிய ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்குவோம்.
நண்பர்களே,
இந்தியா மற்றும் கொரியா இடையிலான இருதரப்பு வர்த்தகம் இன்று 27 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டியுள்ளது. 2030-ம் ஆண்டுக்குள் இதை 50 பில்லியன் டாலராக உயர்த்த பல முக்கிய முடிவுகளை இன்று எடுத்துள்ளோம்.
இரு நாடுகளுக்கிடையிலான நிதி ஓட்டத்தை எளிதாக்க இந்தியா-கொரியா நிதி மன்றத்தை தொடங்கியுள்ளோம். கொரிய நிறுவனங்கள், குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள், இந்தியாவிற்குள் நுழைவதை எளிதாக்க கொரிய தொழில்துறை நகரை அமைப்போம். மேலும், அடுத்த ஒராண்டிற்குள் இந்தியா-கொரியா வர்த்தக ஒப்பந்தத்தை மேம்படுத்துவோம்.
நண்பர்களே,
அடுத்த தசாப்த வெற்றிக்கதைகளுக்கான அடித்தளத்தை இன்று அமைக்கிறோம். செயற்கை நுண்ணறிவு, செமிகண்டக்டர்கள், தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா-கொரியா டிஜிட்டல் பாலத்தை தொடங்குகிறோம். கப்பல் கட்டிடம், நிலைத்தன்மை, எஃகு, மற்றும் துறைமுகங்கள் போன்ற துறைகளிலும் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின்றன.
நண்பர்களே,
உலகளாவிய பதற்றங்களின் இந்தக் காலத்தில், இந்தியாவும் கொரியாவும் சேர்ந்து அமைதி மற்றும் நிலைத்தன்மைக்கான செய்தியை வழங்குகின்றன. இன்று கொரியா சர்வதேச சூரிய சக்தி கூட்டணியிலும் இந்தோ-பசிபிக் கடல் முன்முயற்சியிலும் இணைவதை நாங்கள் வரவேற்கிறோம். எங்கள் கூட்டு முயற்சிகளின் மூலம் அமைதியான, முன்னேற்றமான, மற்றும் உள்ளடக்கிய இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை உருவாக்க தொடர்ந்து பங்களிப்போம்.
உலகளாவிய சவால்களை சமாளிக்க சர்வதேச அமைப்புகளில் மாற்றங்கள் அவசியம் என்பதிலும் நாங்கள் ஒருமித்துள்ளோம்.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்பு, இந்தியாவின் மகத்தான கவிஞர் ரவீந்திரநாத் தாகூர், கொரியாவை “கிழக்கின் விளக்கு” என்று குறிப்பிட்டார். இருநாடுகளின் கூட்டாண்மையின் மூலம், இரு நாடுகளின் முன்னேற்றத்துக்கு மட்டுமல்லாமல் உலகத்தின் முழு வளத்திற்கும் வழிவகுப்போம்.
மிக்க நன்றி.
----
(Release ID 2253896)
AD/PKV/KR
(रिलीज़ आईडी: 2280690)
आगंतुक पटल : 19
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam