பிரதமர் அலுவலகம்
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
01 JUL 2026 12:22PM by PIB Chennai
தேசிய மருத்துவர்கள் தினத்தையொட்டி நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டின் மீதான அவர்களுடைய உறுதிப்பாடு கருணை, இணையற்ற சேவை ஆகியவற்றுக்கு பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் கடின உழைப்பு, கருணை, அர்ப்பணிப்பு ஆகியவை இந்தியாவின் சுகாதார அமைப்பின் முதுகெலும்பாக திகழ்கின்றன என்று திரு மோடி கூறியுள்ளார். மிகவும் சவால்மிக்க சூழல்களிலும், அவர்களுடைய அயராத முயற்சிகள் நாட்டில் உள்ள எண்ணற்ற மக்களின் நம்பிக்கையையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 10 ஆண்டுகளில் சுகாதாரத்துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து குறிப்பிட்டுள்ள பிரதமர், சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் நாடு பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளதாக கூறியுள்ளார். நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளதையும் இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதையும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி மருத்துவராக விரும்புவோருக்கு பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு சுகாதாரத்துறைப் பணியாளர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்துவதையும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆபரேஷன் அமிஸ்டாட் நடவடிக்கையின் ஒரு பகுதியாக வெனிசுலாவில் பணிபுரியும் இந்திய மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பையும் திரு மோடி பாராட்டியுள்ளார். சவால்மிக்க தருணங்களில் அவர்களுடைய தன்னலமற்ற சேவை, சமூகம் நெருக்கடிகளை எதிர்கொள்ளும்போது சுகாதாரத் துறையைச் சேர்ந்தவர்கள், எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுவதாக அவர் தெரிவித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
கடின உழைப்பு, கருணை, அர்ப்பணிப்பு ஆகியவற்றின் மூலம் இந்தியாவின் சுகாதார அமைப்பிற்கு முதுகெலும்பாக திகழும் நம்முடைய அர்ப்பணிப்புமிக்க மருத்துவர்களுக்கு மருத்துவர்கள் தின வாழ்த்துகள். மிகவும் சவால்மிக்க சூழல்களிலும், அவர்களுடைய அயராத முயற்சிகள் நாட்டில் உள்ள எண்ணற்ற மக்களின் நம்பிக்கையையும் பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நமது சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்துவதில் இந்தியா பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை, இரண்டு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது, அதே வேளையில் இளநிலை, முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சி மருத்துவராக விரும்புவோருக்கு பெரும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு சுகாதாரத்துறைப் பணியாளர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்துவதையும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தரமான மருத்துவ சேவை கிடைப்பதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
வளர்ச்சியடைந்த இந்தியாவைக் கட்டமைப்பதையொட்டி, நாம் பணியாற்றும் சூழலில், நோய்த்தடுப்பை மேம்படுத்துவதிலும், மருத்துவ ஆராய்ச்சியை முன்னெடுப்பதிலும், புதுமைக் கண்டுபிடிப்பை பின்பற்றுவதிலும் அனைவருக்கும் சுகாதார வசதிகள் எளிதில் கி்டைப்பதிலும் நமது மருத்துவர்கள் தொடர்ந்து முக்கியப் பங்காற்றுவார்கள்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279696®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2279996)
आगंतुक पटल : 10
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Bengali
,
Bengali-TR
,
Manipuri
,
Assamese
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam