உள்துறை அமைச்சகம்
வெளிநாட்டு நன்கொடைகள் முறைப்படுத்தல் சட்டத்திற்கான 2.0 தளம், இ-ஓசிஐ அட்டை ஆகியவற்றை மத்திய அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்
प्रविष्टि तिथि:
30 JUN 2026 5:09PM by PIB Chennai
வெளிநாட்டு நன்கொடைகள் முறைப்படுத்தல் சட்டத்திற்கான 2.0 தளம், இ-ஓசிஐ அட்டை ஆகியவற்றை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று (30.06.2026) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இன்று தொடங்கப்பட்ட இரண்டு புதிய முன்முயற்சிகளும் குடிமக்களுக்கு அதிகப் பயன் அளிப்பதோடு வசதிகளையும் அதிகரிக்கும் என்றார். வெளிநாட்டு நன்கொடைகள் முறைப்படுத்தல் சட்டத்தின் கீழ், ஏற்கனவே நடைமுறையில் இருந்த ஆவணங்கள் சமர்ப்பித்தல் போன்றவை, நீக்கப்பட்டு டிஜிட்டல் முறையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். இ-கையொப்பம் அடிப்படையில் அ ங்கீகாரம் அளித்தல் என்ஜிஓ தர்ப்பன் வங்கிக் கணக்கு ஒருங்கிணைப்பு ஆகியவை புதிய நடைமுறையின் மூலம் உறுதி செய்யப்படும் என்று குறிப்பிட்ட அவர், இந்த தரவுகள் அனைத்தும் மேக்ராஜ் என்ற அரசின் கிளவுடில் சேகரிக்கப்படும் என்றும் இது தரவுகள் களவாடப்படுவதை வெகுவாகக் குறைக்கும் என்றும் தெரிவித்தார்.
வெளிநாட்டிலிருந்து இந்தியாவில் வாழும் பூர்வகுடியினருக்கான ஓசிஐ அட்டை மின்னணு முறையில் வழங்கும் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. இதனைத் தொடங்கி வைத்த திரு அமித் ஷா, இதன் மூலம் ஏற்கனவே இருந்த பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது என்றார். இத்தகைய அட்டையைப் பெற்று இந்தியாவில் வாழும் 50 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இந்தத் திட்டம் மிகவும் வசதியுள்ளதாக இருக்கும் என்று அவர் கூறினார். 20 ஆண்டுகளுக்குப் பின் புதிய பாஸ்போர்ட் வழங்கும் போது மீண்டும் ஓசிஐ புத்தகம் வழங்க வேண்டிய அவசியம் இருக்காது என்று அவர் குறிப்பிட்டார். இவர்களின் பதிவு எண்ணும் தனித்துவமுறையில் உருவாக்கப்படும் என்று தெரிவித்த திரு அமித் ஷா, டிஜிட்டல் முறையிலான அட்டை என்பதால் ஆவணங்கள் தொலைவது, சேதமடைவது போன்ற பிரச்சனைகள் எழாது என்றும் நிகழ்நேர சரிபார்ப்புக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2279410®=3&lang=1
****
TV/SMB/KPG/SH
(रिलीज़ आईडी: 2279554)
आगंतुक पटल : 18