நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
வர்த்தகம் செய்வதை எளிதாக்குவது, நம்பிக்கை சார்ந்த நிர்வாக நடைமுறைகளை ஊக்குவிக்கும் வகையிலான முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகள்
प्रविष्टि तिथि:
29 JUN 2026 10:39AM by PIB Chennai
ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தச்) சட்டம், மூலம், அளவியல் சட்டத்தின் கீழ் மேம்பாட்டு வழிமுறைகள் குறித்த நடைமுறைகளை, மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய வழிமுறையின் கீழ், முதன்முறையாக ஒழுங்குமுறை அல்லது இணக்க நடைமுறை மீறல்களில் ஈடுபடும் வர்த்தக நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்பு, அத்தகைய விதிமுறைகளில் உள்ள குறைபாடுகளை சரிசெய்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும். இந்த சீர்திருத்தம் நுகர்வோர் பாதுகாப்பை பராமரிப்பதுடன், தன்னார்வ அடிப்படையில் இணக்க நடைமுறைகளை முறையாக வர்த்தக நிறுவனங்கள் செயல்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் உதவிடும்.
மேலும் இதுபோன்ற விதிமுறைகள், தேவையற்ற வழக்குகள் பதிவுசெய்யப்படுவதை குறைப்பதுடன், நம்பிக்கை அடிப்படையிலான ஒழுங்குமுறை விதிகளுடன் கூடிய கட்டமைப்பை உருவாக்குவதன் மூலம், எளிதாக வர்த்தகம் செய்வதற்கான நடைமுறைகளை ஊக்குவிக்க உதவுகிறது.
இந்த சீர்திருத்த நடவடிக்கை உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், சிப்பம் கட்டும் பணி செய்பவர்கள், விநியோகஸ்தர்கள், பழுதுநீக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள், வர்த்தகர்கள், எம்எஸ்எம்இ நிறுவனங்கள், இதர ஒழுங்குபடுத்தப்பட்ட முறைசார்ந்த நிறுவனங்களுக்கும் பொருந்தும்.
மோசடி, தொடர்ச்சியான விதிமீறல்கள், முறைகேடுகள், நுகர்வோல் நலனை பாதிக்கும் செயல்கள் ஆகியவற்றுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகள் தொடரும்.
நுகர்வோர் நலன்களை பாதுகாப்பதுடன் நம்பிக்கை சார்ந்த நிர்வாக நடைமுறைகளை வலுப்படுத்துவதே இந்த சீர்திருத்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும்.
சட்டமுறை அளவியல் சட்டத்தின் கீழ், விதிமீறல்களில் ஈடுபடும் வர்த்தக நிறுவனத்தைக் கண்டறிந்து அதன் குறைபாடுகளை சரிசெய்வதற்கான கால அவகாசத்தை அளிப்பதற்கான மேம்பாட்டு அறிவிக்கையை வழங்க சட்டமுறை அளவியல் அதிகாரிக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது.
ஒழுங்குபடுத்தப்பட்ட நிறுவனம் பரிந்துரைக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் தங்களது விதிமீறல்களை சரிசெய்துகொள்ள இணங்குவதன் மூலம் தேவையற்ற தண்டனை நடவடிக்கைகள், வழக்குகளை தவிர்ப்பதற்கும் இது உதவிடும். எனினும் சட்டமுறை அளவியல் அதிகாரியின் மேம்பாட்டு அறிவிக்கைக்கு இணங்கத் தவறினால் அல்லது மீண்டும் மீண்டும் விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது சட்டமுறை அளவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவும் வகை செய்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278745®=3&lang=1
***
SS/SV/LDN/KR
(रिलीज़ आईडी: 2278915)
आगंतुक पटल : 4