சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மத்திய சுகாதாரம், குடும்ப நல மன்றத்தின் 16-வது மாநாட்டில் 'சுமன் செயல்திட்டம் 2030'-ஐ மத்திய சுகாதார அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா இன்று வெளியிடவுள்ளார்

प्रविष्टि तिथि: 29 JUN 2026 10:48AM by PIB Chennai

மத்திய சுகாதாரம், குடும்ப நல மன்றத்தின் 16-வது மாநாட்டில்  'சுமன் செயல்திட்டம் 2030'-ஐ மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜகத் பிரகாஷ் நட்டா இன்று வெளியிடுவார். பாதுகாப்பான தாய்மை காப்பீட்டுக்கான இந்த செயல்திட்டம் (சுமன்), தாயின், பச்சிளங்குழந்தையின் சுகாதாரத்தை வலுப்படுத்தவும், 2030-க்குள் தாய், சேய் இறப்பு விகிதத்தைக் குறைப்பதற்கான நீடித்த வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்தவும் வடிவமைக்கப்பட்ட ஒரு விரிவான, பன்முக உத்திசார் கட்டமைப்பாகும்.

கடந்த பத்தாண்டுகளில் இந்தியாவில் தாய் நலனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், அதிக கவனம் செலுத்தப்படும் மாநிலங்களில், தாய், சேய் இறப்பு விகிதத்தை மேலும் குறைப்பதற்கு தொடர்ச்சியான இடைவெளிகள் தடையாக உள்ளன. இந்த செயல்திட்டம், மாநிலங்கள், மாவட்டங்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட, தனிப்பயனாக்கப்பட்ட தலையீடுகளை செய்வதன் மூலம் ஒரு சீரான அணுகுமுறைக்கு அப்பாலும் செல்கிறது.

அதிக கவனம் செலுத்தப்படும் 13 மாநிலங்களான அசாம், பீகார், சத்தீஸ்கர், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப் பிரதேசம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், மேற்கு வங்கம் ஆகியவற்றில் உள்ள 130 மாவட்டங்களுக்கான இலக்கு சார்ந்த, காலவரையறைக்குட்பட்ட உத்திகளை இந்தச் செயல்திட்டம் அறிமுகம் செய்கிறது. மேலும் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களிலும் முன்னேற்றத்தைத் தக்கவைத்து, தாய்-பச்சிளங்குழந்தை சுகாதார சேவைகள் முழுமையடைவதை உறுதி செய்வதற்கான உத்திகளையும் கோடிட்டுக் காட்டுகிறது.

தாய் இறப்பும், சிசு இறப்பும் இல்லாத நிலை, அனைவருக்கும் மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பு, மருத்துவமனைகளில் பிரசவம், முழுமையான நோய்த்தடுப்பு ஆகியவற்றை ஊக்குவிப்பதையும், உள்ளூர் பொறுப்புடைமையை வலுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட 'சுமன் பஞ்சாயத்து' போன்ற முன்னெடுப்புகள் மூலம் சமூகப் பங்கேற்பு இந்த உத்தியின் முக்கியத் தூணாக அமைகிறது. மேலும், நேர்மறையான தாய் - பச்சிளங்குழந்தை சுகாதாரப் பழக்கவழக்கங்கள் குறித்த விழிப்புணர்வு, பங்கேற்பு மற்றும் அவற்றை ஏற்றுக்கொள்வதை மேம்படுத்துவதற்காக, 'தாய்மார்களின் சுற்றுலா' என்ற சமூகத் தளத்தையும் இந்த செயல்திட்டம் அறிமுகம் செய்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278748&reg=3&lang=1

 

****

SS/SMB/KR


(रिलीज़ आईडी: 2278909) आगंतुक पटल : 4
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , हिन्दी , Gujarati , Kannada