பிரதமர் அலுவலகம்
கர்நாடக மாநிலத்துக்கு பயணம் மேற்கொண்ட பிரதமர் 'ஸ்ரீ குரு பைரவைக்யா கோயிலைத்' திறந்து வைத்ததுடன், பயணத்தின் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்
प्रविष्टि तिथि:
15 APR 2026 5:46PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று (15.04.2026) கர்நாடக மாநிலத்துக்கு மேற்கொண்ட தமது பயணத்தின் காட்சிகளைப் பகிர்ந்துள்ளார்.
கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள 'ஸ்ரீ ஆதிச்சஞ்சனகிரி மகாசம்ஸ்தான மடத்தில்', ஸ்ரீ குரு பைரவைக்யா கோயில் திறக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்தப் புனிதத் தலம், நாட்டின் காலத்தால் அழியாத ஆன்மீக நெறிமுறைகளுக்கும், தொன்றுதொட்டு வரும் சேவை மற்றும் ஞான மரபுகளுக்கும் ஒரு சின்னமாகத் திகழ்வதாகப் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
தமது பயணத்தின் போது, பிரதமர் ஜ்வாலா பீடத்திற்கு சென்றதுடன், ஸ்ரீ காலபைரவர் ஆலயத்திலும் வழிபாடு மேற்கொண்டார்.
மேலும், ஜகத்குரு பரமபூஜ்யா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ டாக்டர் பாலகங்காதரநாத மகாசுவாமிகளுக்கு அவர் மரியாதை செலுத்தினார். சுவாமிகள் ஆன்மீகம் மற்றும் சேவைக்கான ஒரு வழிகாட்டும் விளக்காகத் திகழ்ந்ததாகவும், சமூக மேம்பாட்டிற்காக அவர் மேற்கொண்ட போற்றுதலுக்குரிய முயற்சிகள் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தொடர்ச்சியாகப் பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது:
“இன்று காலை, கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள 'ஸ்ரீ ஆதிச்சஞ்சனகிரி மகாசம்ஸ்தான மடத்தில்', ஸ்ரீ குரு பைரவைக்ய ஆலயம் திறக்கப்பட்டது.
இந்தப் புனிதத் தலம், நமது மண்ணின் காலத்தால் அழியாத ஆன்மீக நெறிமுறைகளுக்கும், தொன்றுதொட்டு வரும் சேவை மற்றும் ஞான மரபுகளுக்கும் ஒரு சிறப்பிடமாகத் திகழ்கிறது.”
ஸ்ரீ ஆதிச்சஞ்சனகிரி மகாசம்ஸ்தான மடத்தில் அமைந்துள்ள ஜ்வாலா பீடத்திற்கு சென்றதுடன், ஸ்ரீ காலபைரவர் ஆலயத்திலும் வழிபாடு மேற்கொண்டேன்.”
ஜகத்குரு பரமபூஜ்யா ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ டாக்டர் பாலகங்காதரநாத மகாசுவாமிகளுக்கு மரியாதை செலுத்தினேன். அவர் ஆன்மீகம் மற்றும் சேவைக்கான ஒரு வழிகாட்டும் விளக்காகத் திகழ்ந்தவர். சமூக மேம்பாட்டிற்காகப் போற்றுதலுக்குரிய முயற்சிகளை மேற்கொண்டவர். அவரது பணிகள் உலகம் முழுவதும் உள்ள எண்ணற்ற மக்களின் வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.”
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252285®=3&lang=1
***
/PKV/PD/KR
(रिलीज़ आईडी: 2278827)
आगंतुक पटल : 3
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam