பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்திற்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

प्रविष्टि तिथि: 14 APR 2026 8:15PM by PIB Chennai

சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.

தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்கு தமது இரங்கல்களைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக கூறியுள்ளார். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் பதிவிட்டிருப்பதாவது:

“சத்தீஸ்கரின் சக்தி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி தொழிற்சாலையில் ஏற்பட்டுள்ள விபத்து பயங்கரமானது. தங்கள் அன்புக்குரியவர்கைளை இழந்தவர்களுக்கு எனது இரங்கல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உள்ளூர் நிர்வாகம் உதவி வருகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூபாய் 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்.”

***

(Release ID: 2251961)

SS/IR/RJ/KR


(रिलीज़ आईडी: 2278812) आगंतुक पटल : 15
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Assamese , Manipuri , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam