பிரதமர் அலுவலகம்
மேற்காசியா, ஹோர்முஸ் நீரிணை விவகாரங்கள் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அமெரிக்க அதிபர் திரு டோனல்ட் டிரம்புடன் பிரதமர் கலந்துரையாடினார்
இடுகை இடப்பட்ட நாள்:
14 APR 2026 9:30PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் திரு டோனல்ட் டிரம்ப் தொலைபேசி வாயிலாக அழைத்து உரையாடினார்.
பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள சிறப்பான வளர்ச்சி குறித்து இருதலைவர்களும் விவாதித்து அனைத்து விவகாரங்களிலும் விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது என்று உறுதிபூண்டனர்.
மேற்காசியாவில் நிலவும் சூழல் குறித்தும் அவர்கள் விவாதித்து ஹோர்முஸ் நீரிணையை திறப்பது மற்றும் அதனைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார்கள்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி எழுதியிருப்பதாவது:
“எனது நண்பரும், அதிபருமான திரு டோனல்ட் டிரம்பிடம் இருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. பல்வேறு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள சிறப்பான வளர்ச்சி குறித்து நாங்கள் விவாதித்தோம். அனைத்து விவகாரங்களிலும் விரிவான உலகளாவிய உத்திசார் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துவது என்று நாங்கள் உறுதிபூண்டோம். மேற்காசியாவில் நிலவும் சூழல் குறித்தும் விவாதித்து ஹோர்முஸ் நீரிணையை திறப்பது மற்றும் அதனைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தினோம்.”
***
(Release ID: 2251982)
SS/IR/RJ/KR
(வெளியீட்டு அடையாள எண்: 2278809)
வருகையாளர் எண்ணிக்கை : 27
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam