சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் திரு ஜெ.பி. நட்டா, ஆரோக்கிய சேது 2.0 உள்ளிட்ட டிஜிட்டல் முன்முயற்சிகளை ஜூன் 29 அன்று தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
27 JUN 2026 11:23AM by PIB Chennai
இந்தியாவின் டிஜிட்டல் சுகாதாரச் சூழலமைப்பை வலுப்படுத்தும் ஒரு முக்கிய நடவடிக்கையாக, மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் திரு ஜெ பி நட்டா, 2026 ஜூன் 29 அன்று புது தில்லியில் உள்ள விக்யான் பவனில் சுகாதாரத் துறைக்கான தொடர் டிஜிட்டல் முன்முயற்சிகளைத் தொடங்கி வைக்கிறார். தேசிய சுகாதார ஆணையம், மின்னணு சுகாதாரப் பதிவுத் தரங்களுக்கான தேசிய வள மையம் ஆகியவற்றின் வழிகாட்டுதலின் கீழ் உருவாக்கப்பட்ட இந்த முன்முயற்சிகள், சுகாதார சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தி, ஒருங்கிணைந்த செயல்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
தொடங்கப்படும் இந்த முன்முயற்சிகளில், மக்களுக்கான செயலிகள், சேவை வழங்குநர்களை மையமாகக் கொண்ட தீர்வுகள், பதிவேடுகள், தரவுத் தரநிலைகள் ஆகியவை அடங்கும்.
தொடங்கப்படவுள்ள முக்கிய முன்முயற்சிகளில், மக்களுக்கான ஒரு விரிவான தனிநபர் சுகாதாரப் பதிவுச் செயலியான ஆரோக்கிய சேது 2.0 ஒன்றாகும். கொவிட்-19 பெருந்தொற்றின் போது ஏற்படுத்தப்பட்ட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு, மேம்படுத்தப்பட்ட இந்தச் செயலியானது, ஒரே தளத்தின் மூலம் பல டிஜிட்டல் சுகாதார சேவைகளுக்கான ஒரு நுழைவாயிலை வழங்குகிறது.
ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கம் தொடர்பான மேலும் தகவல்களுக்கு https://abdm.gov.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278347®=3&lang=1
***
(Release ID: 2278347)
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2278365)
आगंतुक पटल : 20