வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா - இங்கிலாந்து வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக 1,000 ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள் - மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல்

प्रविष्टि तिथि: 26 JUN 2026 6:46PM by PIB Chennai

இந்தியா - இங்கிலாந்து விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தத்தின் பலன்களை, தொழில்துறையினர் முழுமையாகப் பயன்படுத்திக்கொள்ள உதவும் வகையில், நாடு முழுவதும் 1,000 ஆலோசகர்கள் நியமிக்கப்படுவார்கள் எனவும், வர்த்தக இணையதளம் மேம்படுத்தப்படும் எனவும் மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார்.

திரு பியூஷ் கோயல், இன்று (26.06.2026) லண்டனில் நடைபெற்ற 10-வது வருடாந்திர இங்கிலாந்து-இந்தியா வார நிகழ்ச்சியின் போது, 2026 ஜூலை 15 அன்று அமல்படுத்தப்படவுள்ள இந்தியா-இங்கிலாந்து விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம் உருவாகும் வாய்ப்புகளை எடுத்துரைக்கும் வகையில், பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றார்.

இதுவரையிலான இந்தியாவின் மிகவும் விரிவான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமான இந்தியா-இங்கிலாந்து விரிவான பொருளாதார, வர்த்தக ஒப்பந்தம், இருதரப்பு வர்த்தகத்தை ஆண்டுக்கு 25.5 பில்லியன் பவுண்டுகள் அளவுக்கு அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இந்தியா-இங்கிலாந்து ஒத்துழைப்பானது, பாரம்பரிய வர்த்தகத்தைத் தாண்டி, தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, முக்கிய கனிமங்கள், பாதுகாப்பு, தூய்மையான எரிசக்தி போன்ற உத்திசார் துறைகளையும் உள்ளடக்கி விரிவடைந்துள்ளது என்று கூறினார். 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278276&reg=3&lang=1

(Release ID : 2278276)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2278294) आगंतुक पटल : 8
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Malayalam