பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டத்தில் பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது
प्रविष्टि तिथि:
26 JUN 2026 11:02AM by PIB Chennai
மத்திய பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி். அன்னபூர்ணா தேவி, கிர்கிஸ் குடியரசின் பிஷ்கெக் நகரில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பெண்கள் மன்றம் - 2026 கூட்டத்தில் காணொலிக் காட்சி மூலம் உரையாற்றினார். அதில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கொள்கைகளில் இந்தியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தியதுடன், ஒத்துழைப்பை வலுப்படுத்தவும் அமைப்பின் பகிரப்பட்ட வளர்ச்சி இலக்குகளை முன்னெடுத்துச் செல்லவும் இந்தியா உறுதி பூண்டுள்ளதாகக் கூறினார்.
பொருளாதார வளர்ச்சியில் பெண்களின் பங்கு குறித்த குழு அமர்வில் தொடக்க உரை ஆற்றிய அமைச்சர், பெண்கள், வளர்ச்சியின் பயனாளிகளாக மட்டுமல்லாமல், உந்துசக்தியாகவும் உள்ளனர் என்றும், இதுவே பெண்கள் தலைமையிலான வளர்ச்சி குறித்த இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை என்றும் வலியுறுத்தினார்.
கிட்டத்தட்ட 10 கோடி பெண்கள் 90 லட்சத்திற்கும் மேற்பட்ட சுய உதவிக் குழுக்களில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 3 கோடிக்கும் அதிகமானோர் லட்சாபதி சகோதரிகளாக மாறியுள்ளனர் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மிஷன் சக்தி, ஊட்டச்சத்து இயக்கம் போன்றவை பெண்களின் பாதுகாப்பு, உடல் நலம், பொருளாதாரப் பங்களிப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் தூண்களாக உள்ளன என்று அமைச்சர் தெரிவித்தார். பெண்களின் பொருளாதாரத் தலைமைத்துவத்தையும் நல்வாழ்வையும் மேம்படுத்துவதில், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புடன் தனது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் இந்தியா தயாராக உள்ளதாக அமைச்சர் திருமதி அன்னபூர்ணா தேவி தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278103®=3&lang=1
(Release ID: 2278103)
****
TV/PLM/SH
(रिलीज़ आईडी: 2278131)
आगंतुक पटल : 15