சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கான காலாவதித் தேதி - வரைவுத் திருத்தம் குறித்துப் பொதுமக்களின் கருத்துக்கள் வரவேற்பு

प्रविष्टि तिथि: 26 JUN 2026 10:22AM by PIB Chennai

இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கான மீதமுள்ள காலாவதித் தேதியை முறைப்படுத்துவதையும், மருந்துத் துறையில் வணிகம் செய்வதை மேலும் எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டு, மத்திய சுகாதார, குடும்ப நல அமைச்சகம், 1945-ம் ஆண்டு மருந்து விதிகளின் 31-ம் விதியில் திருத்தங்களைப் பரிந்துரைத்து ஒரு வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 2026 ஜூன் 22-ம் தேதியிட்ட அரசிதழ் அறிவிப்பு ஜிஎஸ்ஆர் 505 (இ) மூலம் பொதுமக்களின் கருத்துக்கேட்புக்காக வெளியிடப்பட்ட வரைவுத் திருத்தம், இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு தற்போதுள்ள 60 சதவீதத்திற்கும் அதிகமான குறைந்தபட்ச எஞ்சிய சேமிப்புக் காலம் என்ற நிபந்தனையை, இறக்குமதியின்போது குறைந்தபட்சம் 12 மாதங்கள் எஞ்சிய சேமிப்புக் காலம் எனத் திருத்துவதற்குப் பரிந்துரைக்கிறது. இருப்பினும், அவற்றின் சிறப்புத் தன்மை, பொது சுகாதாரக் கருத்தாய்வு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, உயிரியல் பொருட்களுக்கும் கதிரியக்க மருந்துகளுக்கும் தற்போதுள்ள 60 சதவீதத்திற்கும் அதிகமான குறைந்தபட்ச எஞ்சிய சேமிப்புக் காலம் என்ற நிபந்தனை தொடர்ந்து பொருந்தும்.

 

முன்மொழியப்பட்ட இந்தத் திருத்தம், நோயாளிகளுக்குத் தரமான மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதோடு, மருந்து விநியோகச் சங்கிலியில் அதிக செயல்திறனை எளிதாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் நாட்டிற்குள் நுழைந்தவுடன் குறைந்தபட்சம் 12 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் காலத்தைக் கொண்டிருப்பதை உறுதி செய்வதன் மூலம், காலாவதியாவதற்கு முன்பு விநியோகம், நுகர்வுக்கு ஆகியவற்றுக்குப் போதுமான நேரத்தை இந்த முன்மொழிவு வழங்குகிறது. இதன்மூலம், நோயாளிகள் போதுமான பயன்பாட்டுக் காலம் கொண்ட மருந்துகளைத் தொடர்ந்து பெறுவதை இது உறுதி செய்கிறது.

 

இதன் விளைவாக, விநியோக மேலாண்மை மேம்படுத்தப்பட்டு, செலவுகள் குறைக்கப்பட்டு, நாட்டில் அத்தியாவசிய மருந்துகளின் இருப்பு வலுப்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்மொழியப்பட்ட திருத்தமானது, மருந்துகளை இறக்குமதி செய்யும் நேரத்தில் பொருந்தக்கூடிய எஞ்சிய பயன்பாட்டுக் காலத் தேவைக்கு மட்டுமே தொடர்புடையது என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.

வரைவு அறிவிப்பு தொடர்பாக அனைத்துத் தரப்பினரிடமிருந்தும் ஆட்சேபனைகளையும் ஆலோசனைகளையும் அமைச்சகம் கோரியுள்ளது

 

கருத்துக்களை, துணைச் செயலாளர் (மருந்துகள்), சுகாதாரம் & குடும்ப நல அமைச்சகம், இந்திய அரசு, யு-6, பணி அரங்கம்–சி பிரிவு, முதல் தளம், கர்த்தவ்ய பவன்-1, புது தில்லி – 110001 என்ற முகவரிக்கோ அல்லது drugsdiv-mohfw[at]gov[dot]in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ , நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் சமர்ப்பிக்கலாம்.

வரைவு அரசிதழ் அறிவிப்பை பின்வரும் இணைப்பில் காணலாம்: https://egazette.gov.in/WriteReadData/2026/273833.pdf

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2278097&reg=3&lang=1

(Release ID: 2278097)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2278121) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati , Telugu , Kannada