ஆயுஷ்
azadi ka amrit mahotsav

ஆரோக்கியம், நல்லிணக்கம், கூட்டு நல்வாழ்வை மேம்படுத்துவதில் யோகாவின் பங்களிப்பை சர்வதேச யோகா தின கொண்டாட்டம் உறுதிப்படுத்தியது – மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ்

प्रविष्टि तिथि: 23 JUN 2026 4:11PM by PIB Chennai

12-வது சர்வதேச யோகா தினம் 2026 கொண்டாட்டம், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில், மக்கள் பங்கேற்புடன் நடைபெற்றது. இது முழுமையான ஆரோக்கியம், நல்வாழ்வுக்கான ஒரு உலகளாவிய இயக்கமாக யோகாவின் வளர்ந்து வரும் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியது.

மேற்கு வங்கத்தின் கொல்கத்தாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 35,000 பேர் பங்கேற்றனர். சர்வதேச யோகா தினம் 2026-ஐ உண்மையான உலகளாவிய கொண்டாட்டமாக மாற்றியமைத்த உலக நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நன்றி தெரிவித்தார்.

அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, எகிப்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் யோகா அமர்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டன. நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையகம், ஐரோப்பா, மேற்கு ஆசியா, ஆப்பிரிக்கா, கிழக்கு ஆசியாவின் முக்கிய நகரங்களில் பங்கேற்பாளர்கள் இந்தக் கொண்டாட்டங்களில் கலந்துகொண்டனர். இது ஆரோக்கியம், நல்லிணக்கம், கூட்டு நல்வாழ்வுக்கான ஒரு பாலமாக யோகா உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருப்பதைப் பிரதிபலித்தது.

ஆயுஷ் துறை இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ், 12-வது சர்வதேச யோகா தினத்தை மாபெரும் வெற்றியாக மாற்றியதில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளைச் சேர்ந்த மக்கள், யோகா பயிற்சியாளர்கள், தன்னார்வலர்கள், நிறுவனங்கள், பங்கேற்பாளர்களின் பங்களிப்பைப் பாராட்டினார். “ஆரோக்கியமான முதுமைக்கான யோகா” என்ற கருப்பொருளின் கீழ், மக்களின் பங்கேற்பு ஆரோக்கியம், நல்லிணக்கம், கூட்டு நல்வாழ்வை மேம்படுத்துவதில் யோகாவின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2277016&reg=3&lang=1

****

TV/IR/LDN/SH


(रिलीज़ आईडी: 2277177) आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Assamese , Punjabi , Gujarati , Telugu , Malayalam