கூட்டுறவு அமைச்சகம்
மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித்ஷா தேசிய வேளாண் ஒத்துழைப்பு சந்தைக் கூட்டமைப்பின் ஏல இணையதளத்தை புதுதில்லியில் தொடங்கி வைக்கிறார்
प्रविष्टि तिथि:
22 JUN 2026 2:26PM by PIB Chennai
தேசிய வேளாண் ஒத்துழைப்பு சந்தைக் கூட்டமைப்பின் NAFEX.in என்ற ஏலத்திற்கான இணையதளத்தை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா புதுதில்லியில் 2026 ஜூன் 23 அன்று (நாளை) தொடங்கி வைக்கிறார். இந்நிகழ்ச்சியில் மத்திய வேளாண், விவசாயிகள் நலத்துறை அமைச்சர் திரு சிவ்ராஜ் சிங் சௌஹானும் பங்கேற்கிறார்.
தேசிய வேளாண் ஒத்துழைப்பு சந்தைக் கூட்டமைப்புத் தலைவர் திரு ஜிதாபாய் அஹிர், மேலாண் இயக்குநர் திரு தீபக் அகர்வால், உயரதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் தேசிய வேளாண் ஒத்துழைப்பு சந்தைக் கூட்டமைப்பின் பல்வேறு முக்கிய மின்னணு, விவசாயிகளை மையமாகக் கொண்ட முன்முயற்சிகள் ஆகியவற்றை திரு அமித் ஷா தொடங்கி வைக்கிறார். இவற்றில் விவசாயிகளின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்களின் இருப்பு மேலாண்மைக்கான இணையதளம் உள்ளிட்டவை அடங்கும்.
ஏல இணையதளத்தில் பதிவுசெய்வதற்கான செயல்முறை விளக்கம், ஏல நடவடிக்கையை தொடங்கிவைத்தல் ஆகியவையும் இந்நிகழ்ச்சியில் நடைபெற உள்ளது.
NAFEX.in என்பது ஏல செயல்முறையில் வெளிப்படைத் தன்மை, செயல்திறன், நடைமுறைகளை எளிமைப்படுத்துதல் ஆகியவற்றை வலுப்படுத்துவதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.
விவசாயிகள், உறுப்பினராக உள்ள நிறுவனங்கள், பங்குதாரர்களின் நலனுக்காக ஏலம் தொடர்புடைய செயல்பாடுகளை சீரமைக்கவும், தேசிய வேளாண் ஒத்துழைப்பு சந்தைக் கூட்டமைப்பின் முழு செயல்பாட்டை மேம்படுத்தவும் இந்த இணையதளம் ஒரு மின்னணு தளத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகையை மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா வழங்க உள்ளார்.
இந்த முன்முயற்சி விவசாயிகளின் குழந்தைகளுடைய கல்விக்கு ஆதரவளித்தல், விவசாயிகளின் நலனையொட்டிய தேசிய வேளாண் ஒத்துழைப்பு சந்தைக் கூட்டமைப்பின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2276539®=3&lang=1
***
SS/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2276752)
आगंतुक पटल : 3