பிரதமர் அலுவலகம்
மகாராஷ்டிராவின் சோலாப்பூர் கிராமப்புறப் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பிற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
प्रविष्टि तिथि:
14 JUN 2026 11:40PM by PIB Chennai
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் கிராமப்புறப் பகுதியில் நிகழ்ந்த விபத்தில் நேரிட்ட உயிரிழப்பு குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளார்.
இந்தத் துயரமான வேளையில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக் கொண்ட பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டார்.
பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குத் தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்று பிரதமர் அறிவித்தார். காயமடைந்தவர்களுக்குத் தலா 50,000 ரூபாய் வழங்கப்படும்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் தெரிவித்திருப்பதாவது:
"மகாராஷ்டிராவின் சோலாப்பூர் கிராமப்புறப் பகுதியில் நிகழ்ந்த துயரமான விபத்தில் நேரிட்ட உயிரிழப்பை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். இந்தத் துயரமான தருணத்தில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு என் அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்குப் பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். காயமடைந்தவர்களுக்குத் தலா ரூ. 50,000 வழங்கப்படும்: பிரதமர் @narendramodi"
(Release ID: 2272814)
***
TV/BR/SH
(रिलीज़ आईडी: 2275700)
आगंतुक पटल : 43
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam