மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

நீட் யுஜி மறுதேர்வுக்கான தயார்நிலை குறித்து மதிப்பீடு செய்வதற்கான உயர்நிலைக் குழுக்கூட்டம் மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் தலைமையில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 18 JUN 2026 2:00PM by PIB Chennai

2026 ஜூன் 21 அன்று நடைபெறவுள்ள  இளநிலை மருத்துவப்பட்டப் படிப்புக்கான நீட் மறுதேர்வுக்கான தயார்நிலையை மதிப்பீடு செய்வது குறித்து கல்வி அமைச்சகம், மாநில அரசுகள்,   தேசிய தேர்வு முகமை, உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின்   உயர் அதிகாரிகளுடனான  ஆய்வுக் கூட்டத்திற்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான் இன்று தலைமை வகித்தார்.  

இந்தக் கூட்டத்தில், பள்ளிக் கல்வி எழுத்தறிவுத்துறைச் செயலாளர் திரு சஞ்சய் குமார், உயர்கல்வித்துறைச் செயலாளர் வினீத் ஜோஷி, தேசிய தேர்வு முகமை தலைமை இயக்குநர் திரு அபிஷேக் சிங் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், தேர்வு நடைமுறையில் ஒருங்கிணைப்பு, வெளிப்படைத்தன்மை, திறன் ஆகியவற்றின் உயர் தரங்களை பராமரிப்பதன் அவசியம் குறித்து வலியுறுத்தினார். சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளும் விழிப்புடனும் முழு தயார் நிலையில் இருக்குமாறு அறிவுறுத்தினார். மறு தேர்வை,  வெளிப்படைத்தன்மையுடனும், நேர்மையாகவும் நடத்துவதற்காக தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளையும் அவர் வலியுறுத்தினார். தேர்வு குறித்த தயார் நிலை, ஒருங்கிணைப்பு பாதுகாப்பு அம்சங்கள், போக்குவரத்து ஏற்பாடுகள், குறைதீர்ப்பு தொடர்பாக விரிவாக இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274524&reg=3&lang=1  

***

SS/IR/KPG/SH

 


(வெளியீட்டு அடையாள எண்: 2274861) வருகையாளர் எண்ணிக்கை : 46