ஊரக வளர்ச்சி அமைச்சகம்
6 கோடி லட்சாதிபதி சகோதரிகளை உறுதிசெய்ய, 700 ஷீ-மார்ட் கடைகளும், 1,000 மாவட்ட மையங்களும் அமைக்கப்படவுள்ளன
प्रविष्टि तिथि:
14 JUN 2026 8:52PM by PIB Chennai
தீன்தயாள் அந்த்யோதயா திட்டம்- தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம், அதன் பல்வேறு துணைத் திட்டங்களின் செயல்பாட்டு முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக, ஊரக வளர்ச்சித் துறைச் செயலாளர் திரு ரோஹித் கன்சால் தலைமையிலான கூட்டம் நடைபெற்றது. இதில் இணைச் செயலாளர்கள் ஸ்வாதி சர்மா, ஜெயஸ்ரீ எம்.ஜி. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆறு கோடி லட்சாதிபதி சகோதரிகளை உருவாக்கும் நோக்கத்துடன் ஊரக வளர்ச்சித் துறை வகுத்துள்ள உத்தியின் முக்கிய அம்சங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.
சுய உதவிக் குழுக்கள் நடத்தும் தொழில் நிறுவனங்களை ஊக்குவிப்பதற்காக, 700 ஷீ-மார்ட்ஸ், 1,000 மாவட்ட நிறைவேற்று மையங்கள், சிறப்பு மையங்களை நிறுவுவதுடன், மாநில அளவிலான கூட்டமைப்புகளை வலுப்படுத்தவும் துறையால் முன்மொழியப்பட்டுள்ளதாக கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மேலும், சுய உதவிக் குழுக்களின் தயாரிப்புகளுக்கு நிலையான சந்தை அணுகலை உறுதி செய்வதற்காக, வலுவான சந்தை இணைப்புகளைக் கொண்ட, அதிக வணிக ஆற்றல் வாய்ந்த இடங்களில் ஷீ-மார்ட்ஸ் கடைகளை அமைக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. செயலாக்கத்தை வலுப்படுத்த, விரிவான வருடாந்திர செயல்பாட்டுக் கால அட்டவணையைத் தயாரிக்குமாறு செயலாளர் உத்தரவிட்டதுடன், காலக்கெடுவை கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272753®=48&lang=1
***
SS/BR/PD
(रिलीज़ आईडी: 2274509)
आगंतुक पटल : 7