பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

சட்டப் பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு குறித்த தமது கட்டுரையின் சில முக்கியப் பகுதிகளை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 09 APR 2026 2:29PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி, சட்டப் பேரவைகள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு குறித்துத் தாம் எழுதிய கட்டுரையின் சில முக்கியப் பகுதிகளை பகிர்ந்துள்ளார். இது வெறும் சட்ட நடவடிக்கை மட்டுமல்ல எனவும், இந்தியாவின் மகளிர் சக்தியின் எதிர்பார்ப்புகளின் பிரதிபலிப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி சமூக ஊடக எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறியிருப்பதாவது:

"பெண்கள் முன்னேறும்போது சமூகமும் முன்னேறுகிறது."

"பொருளாதார, சமூக வாழ்வில் பெண்களின் பங்களிப்பிற்கான அடித்தளங்கள் வலுப்படுத்தப்படுகிறது."

"பெண்கள், நிர்வாகத்திலும் முடிவெடுக்கும் செயல்முறையிலும் பங்கேற்கும்போது, அவர்கள் பொது விவாதத்தை வளப்படுத்தி, ஆளுகையின் தரத்தை மேம்படுத்தி நல்ல அனுபவங்களையும், நுண்ணறிவுகளையும் வழங்குகிறார்கள்."

"2029-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல்களும், வரவிருக்கும் காலங்களில் பல்வேறு மாநிலங்களுக்கான சட்டப் பேரவைத் தேர்தல்களும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை உள்ளடக்கி நடத்தப்பட வேண்டியது கட்டாயமாகும்."

"செப்டம்பர் 2023-ல், நாடாளுமன்றம், மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை ஒருமித்த கருத்துடன் நிறைவேற்றியது

"பெண்களின் பிரதிநிதித்துவத்தை மேம்படுத்துவதில் ஏற்படும் ஒவ்வொரு தாமதமும், நமது ஜனநாயகத்தின் தரத்தையும், அனைவரையும் உள்ளடக்கும் தன்மையையும் வலுப்படுத்துவதில் ஏற்படும் தாமதமாகும்."

"பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்படுவது, முடிந்தவரை, பரந்த ஒருமித்த கருத்தைப் பிரதிபலிப்பதாகவும், பரந்த தேசிய நலனை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும்."

"நாம் ஒன்றிணைந்து முன்னேறி, அரசியலமைப்பு விழுமியங்களை வலுப்படுத்தி, தேசிய முன்னேற்றத்திற்காக நமது மகளிர் சக்திக்கு வலுவூட்டுவோம்."

***

(Release ID: 2250413)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2274489) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Assamese , Bengali , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada , Malayalam