மனித வள மேம்பாட்டு அமைச்சகம்
உலகளாவிய தொழில்நுட்ப மையமாக உயரும் இந்தியா: 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' நிறைவு
प्रविष्टि तिथि:
17 JUN 2026 5:30PM by PIB Chennai
பிரான்ஸ் நாட்டின் நைஸ் நகரில் மூன்று நாட்கள் நடைபெற்ற 'பாரத் இன்னோவேட்ஸ் 2026' தொழில்நுட்ப உச்சிமாநாடு வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் விதமாக நடைபெற்ற இந்த மாநாடு, இந்திய ஸ்டார்ட்-அப்கள் மற்றும் உலக முதலீட்டாளர்களை இணைக்கும் பாலமாக அமைந்தது.
மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல் விழாவில் பேசுகையில், இந்திய ஆராய்ச்சியாளர்கள் மற்றும் மாணவர்கள் உலகத்தரம் வாய்ந்த வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஊக்கப்படுத்தினார். இந்த மாநாட்டில் 120 அதிநவீன தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன. 29 நாடுகளைச் சேர்ந்த 2,000-க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்த மூன்று நாட்களில் 1,350-க்கும் மேற்பட்ட வணிகக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. இதன் விளைவாக, சுமார் 254.5 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான முதலீட்டு உறுதிமொழிகள் கிடைத்துள்ளன. தொழில்நுட்ப பூங்காக்கள், செயற்கை நுண்ணறிவு, விண்வெளி மற்றும் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்த மாநாடு, வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் பயணத்தில் தொழில்நுட்பத் துறையில் புதிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2274112®=3&lang=1
செய்தி அடையான எண்:2274112
****
TV/VK/SH
(रिलीज़ आईडी: 2274352)
आगंतुक पटल : 5