பாதுகாப்பு அமைச்சகம்
இந்தியாவும், தாய்லாந்தும் உற்பத்தி, ஆராய்ச்சி, புதுமைக் கண்டுபிடிப்பு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஒருங்கிணைந்து செயல்பட ஒப்புதல்
प्रविष्टि तिथि:
17 JUN 2026 10:29AM by PIB Chennai
தாய்லாந்து – இந்தியா இடையேயான 10-வது பாதுகாப்பு தொடர்பான உரையாடல் 2026 ஜூன் 16 அன்று பாங்காங்கில் நடைபெற்றது. இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பின் முழு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பரஸ்பரம் நலன் சார்ந்த பிராந்திய, உலகளாவிய பாதுகாப்பு விவகாரங்களில் கருத்துகள் பரிமாறிக்கொள்ளப்பட்டது. இந்த உரையாடலுக்கு தாய்லாந்தின் பாதுகாப்புத்துறைக்கான துணை நிரந்தர செயலாளர் அட்மிரல் நட்டபோல் டியூவானிச்சும், இந்திய பாதுகாப்புத்துறை இணைச் செயலாளர் திரு சத்யஜித் மொகந்தியும் இணைந்து தலைமை தாங்கினார்கள்.
இந்த உரையாடலில் இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில் எழுந்துள்ள பாதுகாப்புச் சூழல் குறித்து இருதரப்பும் விவாதித்து பிராந்திய வளர்ச்சியில் உள்ள கண்ணோட்டங்கள் குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது. இப்பிராந்தியத்தில் அமைதி, ஸ்திரத்தன்மை ஆகியவற்றை மேம்படுத்துவதற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்து அவர்கள் உறுதிபூண்டனர். முந்தைய உரையாடலுக்குப் பிறகு இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து பிரதிநிதிகள் விவாதித்தனர்.
இருநாட்டு ராணுவத்திற்கு இடையேயான ஒத்துழைப்பு, திறன் மேம்பாட்டு முன்முயற்சிகள், பயிற்சிப் பரிமாற்றங்கள், கடல்சார் ஒத்துழைப்பு, பரஸ்பரம் நலன் சார்ந்த இதர துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இருநாடுகளுக்கு இடையேயான தற்போதைய பாதுகாப்புத் தளவாட தொழில்துறை ஒத்துழைப்பு குறித்தும் இந்த உரையாடலில் விவாதிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273831®=3&lang=1
***
SS/IR/RJ/KR
(रिलीज़ आईडी: 2273947)
आगंतुक पटल : 9