இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
எதிர்காலத்தில் அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றில் இந்திய இளைஞர்கள் உலகிற்கு தலைமை வகிப்பார்கள் – திரு ஓம் பிர்லா
प्रविष्टि तिथि:
16 JUN 2026 2:29PM by PIB Chennai
வளர்ச்சியடைந்த இந்தியா இளையோர் நாடாளுமன்றம் 2026-ன் தேசிய அளவிலான நிகழ்வை, மக்களவைத் தலைவர் திரு ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இன்று தொடங்கி வைத்தார். மத்திய இளைஞர் நலன், விளையாட்டுத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்நிகழ்வில், இளைஞர் நலத்துறைச் செயலாளர் பல்லவி ஜெயின் கோவில் கலந்து கொண்டார். நாடு முழுவதும் உள்ள 757 பல்கலைக்கழகங்கள், கல்வி நிறுவனங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இளையோர் பிரதிநிதிகள் 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையில் தங்களின் சிந்தனைகளையும் கண்ணோட்டங்களையும் சமர்பிக்கின்றனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய திரு ஓம் பிர்லா, 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நாட்டின் இளைஞர்கள் முன்னோடிகளாக பங்கேற்க வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். இந்திய இளைஞர்கள் உத்வேகம் உடையவர்களாகவும் லட்சியம் உடையவர்களாகவும் பெரிய கனவுகளைக் கொண்டவர்களாகவும் திகழ்வதாக அவர் குறிப்பிட்டார்.
வளர்ச்சியடைந்த இந்தியாவின் எதிர்கால பின்னணியில், இந்திய இளைஞர்கள், சிறப்புப் படையினராக உள்ளனர் என்று அவர் கூறினார். அவர்களுடைய தீர்மானம், புதுமைக் கண்டுபிடிப்பு சிந்தனை, தலைமைத்துவ சாத்தியக் கூறு ஆகியவை 2047-ம் ஆண்டு இந்தியாவை வடிவமைப்பதற்கான கருவிகளாக உள்ளன என்று தெரிவித்தார். எதிர்வரும் காலங்களில் அறிவியல், தொழில்நுட்பம், ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு ஆகியவற்றில் இந்திய இளைஞர்கள் உலகிற்கு தலைமை வகிப்பார்கள் என்று கூறினார். தற்போது, அனைத்து நாடுகளும் இந்திய இளைஞர்களை நம்பிக்கை, எதிர்கால வாய்ப்புகள் ஆகியவற்றின் சின்னங்களாக காண்கின்றனர் என்று தெரிவித்தார். வளர்ச்சியடைந்த இந்தியா என்ற கனவு எந்தவொரு தனிநபர், நிறுவனம் அல்லது அரசின் விருப்பம் மட்டுமல்ல என்று குறிப்பிட்ட மக்களவைத் தலைவர் இது 140 கோடி இந்தியர்களின் பகிரப்பட்ட தேசிய தீர்மானமாகும் என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273511®=3&lang=1
***
SS/IR/KPG/SH
(रिलीज़ आईडी: 2273681)
आगंतुक पटल : 7