ரெயில்வே அமைச்சகம்
பயணிகள் நெரிசல் மிகுந்த ரயில் நிலையங்களில் மறுசீரமைப்புக்கான திட்டம் குறித்து ரயில்வே அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்
प्रविष्टि तिथि:
15 JUN 2026 6:02PM by PIB Chennai
போரிவலி, அம்பாலா மங்களூரு உள்ளிட்ட பயணிகள் நெரிசல் மிகுந்த ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதற்கான முதன்மைத் திட்டங்கள் குறித்து ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் ரயில்வே உயரதிகாரிகளுடன் இன்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் ரயில்வே இணையமைச்சர் திரு ரவ்னீத் சிங் பிட்டுவும் கலந்துகொண்டார்.
பயணிகளுக்குக் பெருமளவில் இடையூறு ஏற்படாத வகையிலும், ரயில் போக்குவரத்தைப் பாதிக்காத வகையிலும் மறுசீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ரயில்வே அமைச்சர் வலியுறுத்தினார். நிலையத்தின் அன்றாடச் செயல்பாடுகள் திறம்பட நடைபெறுவதை உறுதி செய்வதோடு, எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற ரயில்வே உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.
தற்போதைய நெரிசலைக் குறைப்பதையும், அதே வேளையில் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான வசதிகளை உருவாக்குவதையும் இக்கூட்டம் நோக்கமாகக் கொண்டிருந்தது. கூடுதல் நடைமேடைகள், அகலமான நடைமேம்பாலங்கள், நடைமேடைகளுக்கு இடையிலான சிறந்த இணைப்பு வசதிகள், கூடுதல் நுழைவு, வெளியேறும் பாதைகள், மேம்படுத்தப்பட்ட நடமாடும் பகுதிகள், சிறந்த பலவகை போக்குவரத்து ஒருங்கிணைப்பு, பயணிகளின் தடையற்ற நடமாட்டம் ஆகியவற்றின் மூலம் பயணிகளின் வசதியை மேம்படுத்துவது குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
திட்டமிடலின் அடுத்தடுத்த கட்டங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், மாநில அரசுகள், பிற தரப்பினருடன் கலந்தாலோசிக்குமாறும் திரு வைஷ்ணவ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். நிலைய உள்கட்டமைப்பு மேம்பாடு பயணிகளின் உள்ளூர் மக்களின் தேவைகளைப் பிரதிபலிக்கும் வகையில் இருப்பதை உறுதிசெய்ய, அவர்களின் ஆலோசனைகள், உள்ளூர் தேவைகள் ஆகியவை இறுதி மறுசீரமைப்புத் திட்டங்களில் சேர்க்கப்படும்.
தரம், நீடித்து உழைக்கும் தன்மை, பயணிகளின் வசதி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் அடிப்படையில் நிலையங்களின் வடிவமைப்புகள் அமைய வேண்டும் என்று திரு வைஷ்ணவ் வலியுறுத்தினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2273131®=3&lang=1
****
TV/IR/LDN/SH
(रिलीज़ आईडी: 2273313)
आगंतुक पटल : 28