பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எரிபொருள்களைக் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது, பதுக்கலைக் கட்டுப்படுத்துவதற்கான மத்திய அரசின் நடவடிக்கைகள்

प्रविष्टि तिथि: 12 JUN 2026 2:57PM by PIB Chennai

டீசல், பெட்ரோல் போன்ற எரிபொருள்கள் கள்ளச் சந்தையில் விற்பனை செய்வது சட்டவிரோதமாக அவற்றைப் பதுக்கி வைப்பது போன்ற செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில், மத்திய அரசு பல்வேறு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்கான உத்தரவை மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவித்துள்ளது. இதன்படி, 90 நாட்களுக்கு அனைத்து சில்லறை நுகர்வோருக்கும் டீசல் கிடைப்பதை இது உறுதி செய்கிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைச் சார்ந்த சில்லறை விற்பனை நிலையங்களுக்கு டீசல் விநியோகத்தின் அளவு மாற்றப்படுவதால் ஒரு சில விற்பனை நிலையங்களில் சீரற்ற எரிபொருள் தேவை ஏற்படுகிறது. வாடிக்கையாளர்கள், வர்த்தக நிறுவனங்கள், சில்லறை விற்பனை நிலையங்களிலிருந்து எரிபொருட்களைக் கொள்முதல் செய்வதன் காரணமாக மொத்த மற்றும் சில்லறை விலைகளுக்கு இடையே வேறுபாடு ஏற்படுகிறது. 

தனியார் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயிக்கும் அதிக விலை காரணமாக மோட்டார் டீசல் எனப்படும், அதிவேக டீசல் விற்பனையில் 58 சதவீதம் அளவிற்கு சரிவு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்கள் மூலம் டீசல் விற்பனை குறிப்பிடத்தக்க வளர்ச்சிக் கண்டுள்ளது.  இதில் 327 மாவட்டங்களில் 10 சதவீதத்திற்கும் அதிகமான வளர்ச்சியும் 80 மாவட்டங்களில் 30 சதவீத வளர்ச்சியும் பதிவாகியுள்ளது.

சில்லறை விற்பனை நிலையங்களில் அவ்வப்போது விநியோக நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக ஏற்படும் இடர்பாடுகளிலிருந்து வாடிக்கையாளர்களைப் பாதுகாக்கும் வகையில் இந்த ஒழுங்குமுறை நடவடிக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2272080&reg=48&lang=1   

----

TV/SV/KPG/RJ


(रिलीज़ आईडी: 2272216) आगंतुक पटल : 17
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Gujarati , Kannada , Malayalam