பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவின் உலகளாவிய ஈடுபாடு, நலத்திட்டங்களை வழங்குதல், உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதார நலன் ஆகியவற்றில் மாற்றங்களை காண்பதாக குறிப்பிடும் பிரபல அரசியல் மேதை டாக்டர் கரண் சிங் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்

प्रविष्टि तिथि: 10 JUN 2026 10:06PM by PIB Chennai

பிரபல அரசியல் மேதை டாக்டர் கரண் சிங் எழுதியுள்ள கட்டுரையைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.

பதவிக்காலத்தில் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்சங்களைப் பிரதிபலிக்கும் இக்கட்டுரை, இந்தியாவின் உலகளாவிய ஈடுபாடு, நலத்திட்டங்களை வழங்குதல், உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதார நலன் ஆகியவற்றில் மாற்றங்களை காண்பதாக எடுத்துரைக்கிறது. இந்தியாவின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும், குடிமக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தியதும் பிரதமர் திரு மோடியின் நிலையான பங்களிப்பு என்பதை இக்கட்டுரை குறிப்பிடுகிறது.

இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

“பதவிக்காலத்தில் 12 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள பிரதமர் நரேந்திர மோடியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அம்சங்களை பிரபல அரசியல் மேதை டாக்டர் கரண் சிங் இக்கட்டுரையில் பிரதிபலித்து, இந்தியாவின் உலகளாவிய ஈடுபாடு, நலத்திட்டங்களை வழங்குதல், உள்கட்டமைப்பு, கல்வி, சுகாதார நலன் ஆகியவற்றில் மாற்றங்களை காண்பதாக எடுத்துரைத்துள்ளார். இந்தியாவின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையையும், குடிமக்களுடன் நேரடி தொடர்பை ஏற்படுத்தியதும் பிரதமர் மோடியின் நிலையான பங்களிப்பு என்று அவர் குறிப்பிடுகிறார்.”

***

(Release ID: 2271404)

SS/IR/RJ/KR


(रिलीज़ आईडी: 2271551) आगंतुक पटल : 5
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Telugu , Kannada