கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மங்கோலியாவில் புத்தரின் முதன்மைச் சீடர்களின் புனிதத் திருவுருவச் அடையாளங்களுக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க கண்காட்சி நிறைவடைந்துள்ளது

प्रविष्टि तिथि: 10 JUN 2026 6:11PM by PIB Chennai

மங்கோலியாவின் உலான்பாட்டர் நகரில் உள்ள கண்டன் டெக்சென்லிங் மடாலயத்தில் நடைபெற்ற 10 நாள் கண்காட்சி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புத்தரின் இரு முதன்மைச் சீடர்களான அரஹந்த் சாரீபுத்திரர்அரஹந்த் மௌத்கல்யாயனர் ஆகியோரின் புனிதத் திருவுருவச் அடையாளங்கள் இன்று இந்தியா வந்தடைந்தன. கண்டன் டெக்சென்லிங் மடாலயத்தின் வேண்டுகோளின்படி, மத்தியப் பிரதேச அரசு, இலங்கையின் மகாபோதி சங்கம், சர்வதேச பௌத்த கூட்டமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து, மத்திய கலாச்சார அமைச்சகத்தின் கீழ்இந்திய தேசிய அருங்காட்சியகம் இந்த புனிதத் திருவுருவச் சின்னங்களுக்கான கண்காட்சியை 2026 மே 31 முதல் ஜூன் 9 வரை ஏற்பாடு செய்திருந்தது. மங்கோலிய புத்த பூர்ணிமா தினமான 2026 மே 31 அன்று இக்கண்காட்சி பொதுமக்களின் பார்வைக்காகத் திறந்து வைக்கப்பட்டது.

2026 மே 30 அன்று, அசாம் மாநில ஆளுநர் திரு. லட்சுமண் பிரசாத் ஆச்சார்யா, மங்கோலியாவின் கல்வி அமைச்சர் திரு. என்க்-அம்கலான்கண்டன் டெக்சென்லிங் மடாலயத்தின் கம்ப்பா நோமுன் கான் கேஷே லாரம்பா டி ஜவ்சாண்டோர்ஜ் ஆகியோரிடம் புனிதத் திருவுருவச் சின்னங்கள் முறைப்படி ஒப்படைக்கப்பட்டன.

2025 அக்டோபரில் மங்கோலிய அதிபர் திரு. குரேல்சுக் உக்னா இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி இந்தக் கண்காட்சி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்தியா - மங்கோலியா இடையே, பௌத்த மதத்தின் அடிப்படையில், ஆழமான நாகரிக, ஆன்மீகத் தொடர்புகளைக் கொண்டுள்ளன. இந்தக் கண்காட்சி, மங்கோலிய மக்களுக்கு, புனிதத் திருவுருவச் சின்னங்களை வணங்குவதற்கான ஒரு தனித்துவ வாய்ப்பை வழங்கியது. 10 நாட்கள் நடைபெற்ற இந்தக் கண்காட்சியின் போது, மங்கோலியா முழுவதிலுமிருந்து ஒரு லட்சம் பக்தர்கள் மடாலயத்திற்கு வருகை தந்து மரியாதை செலுத்தினர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271260&reg=48&lang=1

***

TV/SV/RJ


(रिलीज़ आईडी: 2271443) आगंतुक पटल : 6
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Assamese , Gujarati , Kannada