பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
ஆந்திர மாநிலம் அமராவதியில் மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு வளாகம் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல்
प्रविष्टि तिथि:
10 JUN 2026 1:57PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு, ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகரான அமராவதியில் மத்திய அரசு ஊழியர்களுக்கு பொது குடியிருப்புத் தொகுப்பைக் கட்டுவதற்கு இன்று (10.06.2026) ஒப்புதல் அளித்துள்ளது. இது, அமராவதியில் மேற்கொள்ளப்படும் முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்புத் திட்டமாகும்.
இந்த முன்மொழிவின் நோக்கம், மத்திய அரசு ஊழியர்களுக்குப் போதுமான குடியிருப்பு வசதிகளை வழங்குவதாகும். இதன் மூலம் அவர்களின் வீட்டு வசதிக்கான நிதிச் சுமையைக் குறைத்து, அவர்களின் மன உறுதியை உயர்த்தி, அவர்களின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்குப் பங்களிப்பது இதன் நோக்கமாகும். ஊழியர்கள் தங்கள் பணியிடங்களுக்கு அருகிலேயே வசிப்பதை சாத்தியமாக்குவதன் மூலம், ஊழியர்கள் தங்கள் கடமைகளைத் திறம்பட ஆற்றுவதை இத்திட்டம் உறுதி செய்யும்.
இந்தப் பொது குடியிருப்பு வளாகத்தை 17 ஏக்கர் பரப்பளவில் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதில் பாதுகாப்பு அறைகள் உட்பட, வகை II முதல் வகை VI வரையில் மொத்தம் 1,504 குடியிருப்புகளைக் கொண்ட 11 அடுக்குமாடிக் கட்டடங்களாகக் குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன. 9.10 லட்சம் சதுர அடி (84,394 சதுர மீட்டர்) அடித்தளப் பகுதி உட்பட, இந்தத் திட்டத்தின் மொத்தக் கட்டுமான பகுதி 31.30 லட்சம் சதுர அடி (2,90,762 சதுர மீட்டர்) ஆகும். இத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்ட செலவு ₹1,234.91 கோடி ஆகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271055®=3&lang=1
***
TV/PLM/RJ
(रिलीज़ आईडी: 2271311)
आगंतुक पटल : 7
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Bengali-TR
,
Assamese
,
Gujarati
,
Telugu
,
Kannada
,
Malayalam