குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

இந்தியாவில் தொடர்ந்து நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பணியாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு குடியரசு துணைத்தலைவர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 10 JUN 2026 12:30PM by PIB Chennai

இந்தியாவில் தொடர்ந்து நீண்ட காலம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராகப் பணியாற்றும் பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் இன்று தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அவர், பிரதமரின் தொலைநோக்கு தலைமைத்துவத்தின் கீழ், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் காலத்தைப் பிரதிபலிக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாக இச்சாதனை இருப்பதாக விவரித்துள்ளார்.

பொருளாதார வளர்ச்சி, உள்கட்டமைப்பு விரிவாக்கம், சமூக அதிகாரமளித்தல்,  தொழில்நுட்ப மேம்பாடு உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளிலும்  நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் கண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் மேம்பட்ட உலகளாவிய நிலை, புதுப்பிக்கப்பட்ட நாகரிக நம்பிக்கை ஆகியவை இக்காலகட்டத்தில் முக்கிய அம்சங்களாக உருவெடுத்துள்ளது என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

உள்ளடக்கிய வளர்ச்சிக்கான பிரதமரின் அர்ப்பணிப்புக் குறித்து எடுத்துரைத்த திரு சி பி ராதாகிருஷ்ணன், 25 கோடிக்கும் மேற்பட்டவர்கள் வறுமையிலிருந்து விடுபட்டுள்ளதாகவும் லட்சக்கணக்கான குடும்பத்தினருக்கு நம்பிக்கை, வாய்ப்பு, கண்ணியம் ஆகியவற்றை இது அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் வளமையான கலாச்சார, நாகரிக பாரம்பரியத்தைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான பிரதமரின் முயற்சிகளையும் குடியரசு துணைதத்லைவர் பாராட்டியுள்ளார். மறக்கப்பட்ட நாயகர்களை கௌரவிப்பது, இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட மரபுகள், மொழிகளைக் கொண்டாடுவது, கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பது, காலனித்துவ மனப்பான்மையிலிருந்து விடுபடுவது ஆகியவற்றின் மூலம் நாட்டின் பெருமையையும், நாகரிக உணர்வையும் பிரதமர் வலுப்படுத்தியுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.  

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2271019&reg=3&lang=1  

***

SS/IR/KPG/KR


(रिलीज़ आईडी: 2271093) आगंतुक पटल : 13
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Bengali-TR , Assamese , Gujarati , Telugu , Kannada , Malayalam