பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் மாத்ரு வந்தனா திட்டம் தாய்மார்களின் ஆரோக்கியத்தையும், குழந்தைப் பராமரிப்பையும் வலுப்படுத்துகிறது

प्रविष्टि तिथि: 09 JUN 2026 2:46PM by PIB Chennai

பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், 2017-ம் ஆண்டில் தொடங்கிய முதன்மை மகப்பேறு நலத் திட்டமான பிரதமரின் மாத்ரு வந்தனா யோஜனா (தாய்மையைப் போற்றுவோம் திட்டம்) மூலம், தாய்மார்களின் ஆரோக்கியம், குழந்தைப்பருவப் பராமரிப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. இத்திட்டம், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்களுக்கு நிதியுதவி வழங்குவதையும், மேம்பட்ட ஊட்டச்சத்தை அளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

1 ஏப்ரல் 2022 முதல் மிஷன் சக்தி திட்டத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டதிலிருந்து , இத்திட்டத்தின் நிதி உதவியானது மூன்று தவணைகளிலிருந்து இரண்டு தவணைகளாக முறைப்படுத்தப்பட்டுள்ளது. பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கும் பட்சத்தில், இரண்டாவது குழந்தைக்கும் மகப்பேறு நலன்கள் நீட்டிக்கப்பட்டுள்ளன.

 

இத்திட்டத்தின் கீழ், தகுதியுள்ள பயனாளிகள் முதல் குழந்தைக்கு இரண்டு தவணைகளில் ₹5,000, இரண்டாவது குழந்தைக்கு (பெண் குழந்தையாக இருந்தால்) ₹6,000 உதவி வழங்கப்படுகிறது.

 

இத்திட்டம் தொடங்கப்பட்டதிலிருந்து நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது:

 

மொத்த பயனாளிகள் : 4.27 கோடி ( 30 ஏப்ரல் 2026 நிலவரப்படி )

 

வழங்கப்பட்ட மொத்தத் தொகை: ₹20,150 கோடி

 

இத்திட்டம், தாய்மார்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிப்பதற்கும், குறிப்பாக பெண் குழந்தைகளுக்கான கூடுதல் சலுகைகள் மூலம் பாலின சமத்துவத்தை வலுப்படுத்துவதற்கும் பங்களிக்கிறது.

 

ஆரோக்கியமான, அதிகாரம் பெற்ற இந்தியா என்ற தொலைநோக்குப் பார்வைக்கு இணங்க, தகுதியுள்ள ஒவ்வொரு பெண்ணும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவதை உறுதி செய்ய மகளிர் மேம்பாட்டு அமைச்சகம் உறுதிபூண்டுள்ளது.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270668&reg=3&lang=1

(Release ID : 2270668)

****

TV/PLM/SH


(रिलीज़ आईडी: 2270837) आगंतुक पटल : 9
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Bengali-TR , Gujarati , Telugu , Kannada