பிரதமர் அலுவலகம்
அர்மேனியாவில் சிவில் காண்ட்ராக்ட் கட்சியின் பெரும் வெற்றிக்காக திரு நிகோல் பஷின்யானுக்கு பிரதமர் வாழ்த்து
இடுகை இடப்பட்ட நாள்:
08 JUN 2026 4:51PM by PIB Chennai
அர்மேனியா நாடாளுமன்றத் தேர்தலில் சிவில் காண்ட்ராக்ட் கட்சி பெரும் வெற்றி பெற்றதற்காக திரு நிகோல் பஷின்யானுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவரது தலைமை, தொலைநோக்குப் பார்வை மீது அர்மேனிய மக்கள் கொண்டுள்ள நிலையான நம்பிக்கையை இந்தப் புதிய தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது என்று பிரதமர் குறிப்பிட்டார்.
இந்தியா - அர்மேனியா இடையேயான நட்புறவு, ஒத்துழைப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த அவருடன் இணைந்து செயல்படுவதை தாம் எதிர்நோக்கியுள்ளதாக திரு மோடி தெரிவித்தார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:
“நாடாளுமன்றத் தேர்தலில் சிவில் காண்ட்ராக்ட் கட்சி பெரும் வெற்றி பெற்றதற்காக திரு நிகோல் பஷின்யானுக்கு வாழ்த்துகள். உங்களுடைய தலைமை, தொலைநோக்குப் பார்வை மீது அர்மேனிய மக்கள் கொண்டுள்ள நிலையான நம்பிக்கையை இந்தப் புதிய தேர்தல் முடிவு பிரதிபலிக்கிறது. இந்தியா - அர்மேனியா இடையேயான நட்புறவு, ஒத்துழைப்பின் வரலாற்றுச் சிறப்புமிக்க உறவுகளை மேலும் வலுப்படுத்த உங்களுடன் இணைந்து செயல்படுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்.”
Release ID: 2270283
***
SS/IR/LDN/SH
(வெளியீட்டு அடையாள எண்: 2270346)
வருகையாளர் எண்ணிக்கை : 59
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Bengali
,
Assamese
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam