சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
பிரதமரின் மகப்பேறு பெண்கள் பாதுகாப்பு திட்டத்தின் 10 ஆண்டுகாலத்தைக் குறிக்கும் கொண்டாட்டம் நாளை தொடங்குகிறது
प्रविष्टि तिथि:
08 JUN 2026 3:19PM by PIB Chennai
மகப்பேறு பெண்களின் பாதுகாப்பையும், ஆரோக்கியத்தையும் உறுதி செய்யும் வகையிலான நாட்டின் முன்னோடி முன்முயற்சிகளில் ஒன்றான பிரதமரின் மகப்பேறு பெண்கள் பாதுகாப்பு திட்டம் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக 10 ஆண்டு காலம் நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் நாளை மத்திய சுகாதாரம், குடும்பநல அமைச்சகம் கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்துள்ளது.
இதற்கான தொடக்க நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா தலைமை தாங்குகிறார். கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இத்திட்டத்தின் கீழ் உள்ள ஒன்பது உறுதியளிக்கப்பட்ட இலவச சேவைகள் குறித்தும், மகப்பேறுக்கு முந்தைய பராமரிப்பின் முக்கியத்துவம் குறித்தும், மகப்பேறு பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் அறிந்துகொள்ளும் வகையில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் விழிப்புணர்வு, மக்கள் தொடர்பு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.
மேலும் இந்நிகழ்ச்சியில் இத்திட்டத்தின் 10 ஆண்டுகால பங்களிப்பை போற்றும் வகையில் மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை அமைச்சர் திரு ஜெகத் பிரகாஷ் நட்டா, 75 ரூபாய் சிறப்பு நினைவு நாணயத்தையும், 5 ரூபாய் அஞ்சல் தலையையும் வெளியிட உள்ளார்.
2016-ம் ஆண்டு ஜூன் 9 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்த இத்திட்டத்தால், ஒவ்வொரு மாதமும் 9-ம் தேதியன்று கர்ப்பிணிப் பெண்களுக்கு இலவசமாக, முழுமையாக, தரமான மகப்பேறுக்கு முந்தைய மருத்துவப் பராமரிப்பு சேவைகளை வழங்குவதன் மூலம், தாய், பச்சிளம் குழந்தைக்கான சுகாதார நலன் சேவைகளின் சூழலை மாற்றியமைப்பதில் 10 ஆண்டுகாலம் நிறைவடைந்துள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2270246®=48&lang=1
***
SS/IR/LDN/KR
(रिलीज़ आईडी: 2270281)
आगंतुक पटल : 17