மத்திய அமைச்சரவை
azadi ka amrit mahotsav

குடிப்பெயர்வு, விசா, வெளிநாட்டினர் பதிவு, கண்காணிப்புத் திட்டத்தைத் தொடர மத்திய அமைச்சரவை ஒப்புதல்

இடுகை இடப்பட்ட நாள்: 25 MAR 2026 4:12PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, குடிப்பெயர்வு, விசா, வெளிநாட்டினர் பதிவு, கண்காணிப்பு (IVFRT) திட்டத்தை 2026 ஏப்ரல் 01 முதல் 2031 மார்ச் 31 வரை ஐந்து ஆண்டு காலத்திற்கு ₹1800 கோடி நிதி ஒதுக்கீட்டில் தொடர ஒப்புதல் அளித்துள்ளது.

ஐவிஎஃப்ஆர்டி தளம், இந்தியாவில் வெளிநாட்டினரின் குடிப்பெயர்வு, விசா வழங்குதல், பதிவு செய்தல் தொடர்பான செயல்பாடுகளை ஒன்றிணைத்து மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பாதுகாப்பான, ஒருங்கிணைந்த சேவை வழங்கல் கட்டமைப்பிற்குள் குடிப்பெயர்வு, விசா சேவைகளை நவீனமயமாக்கி மேம்படுத்துவதே ஐவிஎஃப்ஆர்டி-யின் முக்கிய நோக்கமாகும். இது தேசிய பாதுகாப்பை வலுப்படுத்தும் அதே வேளையில், முறையான பயணிகளுக்கு வசதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்தத் திட்டம், தற்போதுள்ள கட்டமைப்பை மறுவடிவமைத்து புதுப்பிப்பதன் மூலமும், பாதுகாப்பு கட்டமைப்பில் சமரசம் செய்யாமல் பயனர் அனுபவத்தை மேம்படுத்த அதிநவீன தொழில்நுட்ப தீர்வுகளை அறிமுகப்படுத்துவதன் மூலமும், தற்போதுள்ள ஐவிஎஃப்ஆர்டி திட்டத்தின் நோக்கத்தையும் திறனையும் விரிவுபடுத்தவும் வலுப்படுத்தவும் முயல்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2245088&reg=3&lang=2

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2270106) வருகையாளர் எண்ணிக்கை : 23