பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

எஸ்ஏஎஃப்எஃப் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற இந்திய மகளிர் கால்பந்து அணிக்குப் பிரதமர் வாழ்த்து

प्रविष्टि तिथि: 07 JUN 2026 1:58PM by PIB Chennai

2026-ம் ஆண்டுக்கான தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பான எஸ்ஏஎஃப்எஃப்-பின் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இத்தொடர் முழுவதும் இந்திய மகளிர் அணி சிறப்பாக விளையாடியுள்ளதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இது வரும் காலங்களில் மேலும் பல இளைஞர்களைக் கால்பந்து விளையாட ஊக்குவிக்கும் என்று திரு நரேந்திர மோடி கூறியுள்ளார். அணியின் எதிர்கால முயற்சிகளுக்குப் பிரதமர் தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

"2026 எஸ்ஏஎஃப்எஃப் மகளிர் சாம்பியன்ஷிப் போட்டியை வென்ற இந்திய மகளிர் கால்பந்து அணிக்கு வாழ்த்துகள். அவர்கள் இத்தொடர் முழுவதும் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். இது வரும் காலங்களில் மேலும் பல இளைஞர்களைக் கால்பந்து விளையாட ஊக்குவிக்கும். அணியின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துகள்."

***

(Release ID: 2269986)

TV/PLM/RJ


(रिलीज़ आईडी: 2269999) आगंतुक पटल : 12
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Assamese , Bengali , Manipuri , Gujarati , Kannada